மன்னார் சாந்திபுரம் செளத்பார் பிரதான வீதியை புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை...
மன்னார் சாந்திபுரம் செளத்பார் பிரதான வீதியானது பல வருடங்களாக ஒழுங்கான முறையில் புனரமைக்கபடாத நிலையில் பல மாதங்களுக்கு ஒரு முறை மேலோட்டாமகாக தார் ஊற்றி ஓட்டைகளையும் குழிகளையும் அடைக்கும் பணிகள் மாத்திரமே இடம் பெறுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தின் பிரதான புகையிரத நிலையத்திற்கு செல்லும் செளத்பார் வீதியே மேற்படி குண்டும் குழியுமாக பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுகின்றது.
குறித்த பாதையின் ஊடாக மழை கழிவு நீர் கடலுடன் கலக்கின்றமையினால் நான்குக்கு மேற்பட்ட சிறு பாலங்கள் அமைக்கப்பட்ட போதிலும் வீதியானது முழுமையாக சீரமைக்கப்பட்டவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அதே நேரத்தில் கண்துடைப்புக்காக குழிகளை அடைக்கும் பணிகளே வருடாவருடம் இடம் பெறுகின்ற போது குழிகளும் முழுமையாக அடைக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறித்த வீதி ஒழுங்காக புனரமைக்கப்படாத காரணத்தால் இரவு நேரங்களிலும் அதிகாலை வேளைகளிலும் புகையிரத பயணங்களில் ஈடுபடுவோர் மிகவும் பாதிக்கப்படுவதாக மக்கள் சுட்டிகாட்டுகின்றனர்.
எனவே மக்களின் நலன் கருதி குறித்த வீதியை முழுமையாக சீரமைத்து தருமாறு சாந்திபுரம் மற்றும் செளத்பார் பகுதிகளை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Reviewed by Author
on
June 19, 2019
Rating:

No comments:
Post a Comment