சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்கு அழைத்து செல்லப்படும் இலங்கையர்கள்!
சட்டவிரோத ஆட்கடத்தல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் எட்டு இலங்கையர்கள் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியா ஊடாக ஐரோப்பாவிற்கு தப்பி செல்ல முயற்சிக்கும் கும்பல் ஒன்றின் உறுப்பினர்களே இவ்வாறு அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
மலேசிய பொலிஸார் மேற்கொண்ட தேடுதல்களின் போது எட்டு இலங்கையர்களும், மூன்று மலேசிய பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2018ஆம் ஆண்டின் நடுப்பகுதி முதல் இலங்கை, மலேசியா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளின் வழியான சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகிறது.
இலங்கையர்களை, மலேசிய பயண ஆவணங்களை பயன்படுத்தி ஐரோப்பாவிற்கு அழைத்து செல்லும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்கு அழைத்து செல்லப்படும் இலங்கையர்கள்!
Reviewed by Author
on
June 10, 2019
Rating:

No comments:
Post a Comment