32 ஆயிரம் விலங்குகள் 3 ஆண்டுகளில் பலி! அதிர வைத்த ரயில்வேயின் தரவுகள் -
ரயில்வே தண்டவாளங்களில் வனவிலங்குகள் இறப்பது இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்திய ரயில்வே துறையானது இவ்வாறாக உயிரிழக்கும் விலங்குகள் பற்றிய தரவுகளை வெளியிட்டுள்ளது.
இந்த தரவுகள் கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டுவரை பலியான விலங்குகள் குறித்து எடுக்கப்பட்டவையாகும். அதன்படி 2016ஆம் ஆண்டில் 7,945 விலங்குகளும், 2017ஆம் ஆண்டில் 11,683 விலங்குகளும் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்று பலியாகியுள்ளன.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு மேலும் அதிகரித்துள்ளது. 2018ஆம் ஆண்டு 12,625 விலங்குகள் பலியானதாக பதிவாகியுள்ளது. இவ்வாறாக கடந்து மூன்று ஆண்டுகளில் பலியான விலங்குகளின் எண்ணிக்கை 32,253 ஆக உள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 3,479 விலங்குகள் பலியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. சமீப ஆண்டுகளாக ரயில் விபத்து குறைந்த நிலையில், வனவிலங்குகளின் உயிரிழப்பு அதிகரித்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, விபத்துக்களைத் தடுக்க வயல்கள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளில் வேலிகளை அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
32 ஆயிரம் விலங்குகள் 3 ஆண்டுகளில் பலி! அதிர வைத்த ரயில்வேயின் தரவுகள் -
Reviewed by Author
on
July 05, 2019
Rating:

No comments:
Post a Comment