அகதிகள் படகு கவிழ்ந்து மீண்டும் துயரம்: டசின் கணக்கானோர் இறந்திருக்கலாம் என்று அச்சம் -
துனிசியாவின் Zarzis நகர் அருகே இந்த படகு விபத்து ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மீனவர்களே மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மட்டுமின்றி விபத்துக்குள்ளான படகில் இருந்து நான்கு பேரை மீட்டுள்ளனர். ஆனால் எஞ்சியவர்களின் நிலை என்ன என்பது தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதனிடையே மீட்கப்பட்ட நால்வரில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும், எஞ்சிய மூவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மாயமான அனைவரும் இறந்திருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது. குறித்த பகுதியானது இதுவரை பல உயிர்களை பலிவாங்கியதாக கூறப்படுகிறது.
கடந்த மே மாதத்தில் மட்டும் அகதிகள் படகு கவிழ்ந்து 50 பேர் மரணமடைந்துள்ளனர் என சர்வதேச அகதிகள் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
அகதிகள் படகு கவிழ்ந்து மீண்டும் துயரம்: டசின் கணக்கானோர் இறந்திருக்கலாம் என்று அச்சம் -
Reviewed by Author
on
July 05, 2019
Rating:

No comments:
Post a Comment