பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை: பிரதமருடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு -
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று காலை பிரதமர் நரேந்திரமோடியை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது தமிழக நலன் சார்ந்த பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய உதவும்படியும் பிரதமரிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் மனநிலை ஆகும்.
இதுதொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்மீது இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று பிரதமரிடம் அன்புமணி முறையிட்டுள்ளார்.
இதுகுறித்தும் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசுவதாக பிரதமர் உறுதியளித்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை: பிரதமருடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு -
Reviewed by Author
on
July 28, 2019
Rating:

No comments:
Post a Comment