ஆஸ்துமா உள்ளவர்கள் சாப்பிடக்கூடிய உணவுகள்! -
மூச்சிரைத்தல், இருமல், மற்றும் மூச்செடுக்கக் கஷ்டப்படுதல் ஆகியவைதான் ஆஸ்துமாவின் மிகவும் பொதுவான அறிகுறிகளாகும்.
குளிரான தட்பவெப்ப நிலை, கடுமையான வெப்பம் இந்த இரண்டுமே ஆஸ்துமாவை வரவேற்பவை ஆகும்.
ஆஸ்துமா உள்ளவர்கள் தங்கள் உணவு முறையில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
ஆஸ்துமாவுக்கு உண்ண வேண்டிய உணவுகளைப் போலவே, உண்ணக் கூடாத உணவுகளும் உள்ளன.
அந்தவகையில் தற்போது ஆஸ்துமா உள்ளவர்கள் உண்ணக்கூடிய , உண்ணக் கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- பூண்டும் இஞ்சியும் அற்புதமான ஆண்டிபயாடிக். பனிக்காலத்தில் அவை ஆஸ்துமாவுக்கு எதிராக அவை மிகச் சிறப்பாகப் பணியாற்றும். இவை இரண்டும் மிகச்சிறந்த ஆண்டி இன்ஃபளமேட்டரியாகவும் செயல்படக்கூடியவை.
- சூரிய ஒளியால் கிடைக்கும் விட்டமின் டி ஆஸ்துமாவை குறைக்கக் கூடியது. விட்டமின் சி மூச்சுக் குழாயில் ஏற்படும் அலற்சிகளை குறைக்கிறது. இதனால் மூச்சுத் திணறலையும் தடுக்கிறது.
- நுரையீரலின் நுண் துளைகளிலும் மூச்சுக் குழாயிலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு ஆஸ்துமா பிரச்சனையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் அதிமதுரம் மிகச் சிறந்தது.
- மூச்சு மண்டலத்தின் வழிப்பாதையை சீராக்குவதில் மக்னீசியத்துக்கு முக்கியப் பங்கு உள்ளது. எனவே, மக்னீசியம் அதிகமாக உள்ள மஞ்சள் வண்ண காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைப் போதுமான அளவு எடுத்துக்கொள்வது நல்லது.
தவிர்க்க வேண்டியவை
அளவுக்கு அதிகமாக இவற்றைப் பனிக்காலத்தில் எடுத்துக்கொள்ளும்போது சளி, நெஞ்சடைப்பு, மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் ஆகிய பிரச்சனைகள் உருவாகின்றன. எனவே, பால் பொருட்களிடம் கவனமாக இருங்கள்.ஆஸ்துமாக்காரர்கள் ஜங்க் ஃபுட்ஸ் எனப்படும் நொறுக்குத் தீனிகள் எல்லாவகையில் உடலுக்குத் தீங்கானவையே இவற்றிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது.
இவற்றில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் எனும் மாவுச் சத்து நிறைந்திருப்பதால் இவை மூச்சுக்குழாயின் நுண் துளைகளை மிக மோசமாகப் பாதிக்கின்றன.
ரொட்டி, பாஸ்தா, மிட்டாய்கள், பரோட்ட உள்ளிட்ட மைதா உணவுகள் ஆகியவற்றை பனிக் காலங்களில் தவிர்ப்பதே நல்லது.
ஆஸ்துமா உள்ளவர்கள் சாப்பிடக்கூடிய உணவுகள்! -
Reviewed by Author
on
July 28, 2019
Rating:

No comments:
Post a Comment