பாடசாலை மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல் -
மாணவர்களின் பாடசாலை புத்தகப் பைக்களின் எடையை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவலை கல்வி வெளியீட்டக ஆணையாளர் நாயகம் ஜயந்த விக்ரமநாயக்க வெளியிட்டுள்ளார்.
தரம் 6 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கு ஒரு வருடத்தில் மூன்று பாடப் புத்தகங்கள் மாத்திரமே அச்சிடப்படவுள்ளது.
இந்த பாடப் புத்தகங்கள் மூன்றிலும் மூன்று தவணைகளுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து விடயங்களும் மூன்று பிரிவுகளாக உள்ளடக்கப்படவுள்ளது.
எனினும் குறித்த திட்டத்தினை 2021 ஆம் ஆண்டே நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பாடப் புத்தக எடைகளினால் ஏற்படும் சுமையை பெருமளவு குறைக்கப்பதற்காகவே இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பாடப் புத்தகங்களை மூன்றாக அச்சிடுவதன் மூலம் பதிப்பக செலவு, போக்குவரத்து மற்றும் களஞ்சியப்படுத்தல் செலவுகளையும் குறைக்க முடியும்.
பாடசாலை மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல் -
 Reviewed by Author
        on 
        
July 15, 2019
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
July 15, 2019
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
July 15, 2019
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
July 15, 2019
 
        Rating: 

 
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment