மோசமான சூழலில் விஜயகாந்த் கட்சி: பிரேமலதாவால் கட்சிக்கு வந்த சோதனை -
தேமுதிக முன்பு தனிபெரும் கட்சியாக உருவெடுத்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதவையே கலங்க வைத்த கட்சியாக திகழ்ந்தது. ஆனால் தற்போதைய சூழல் அந்த கட்சி நிர்வாகிகள் பலரை விரும்ப செய்யவில்லை என்பதுதான் நிதர்சனம்.
குறிப்பாக, அதிமுகவோடு கூட்டணி வைத்தது சிலருக்கு பிடிக்கவில்லை, பாஜகவோடு கூட்டணி வைத்தது பலருக்கு பிடிக்கவில்லை. இதனால் சில மாவட்ட நிர்வாகிகள் அந்தக் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகளில் ஏற்கனவே இணைந்துவிட்டனர். இப்போது இந்த பட்டியலில் இணைந்துள்ளவர் கன்னியாகுமரி தேமுதிக மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகநாதன்.
இவர் குமரியில் நல்ல செல்வாக்கு உடையவர். மேலும், அவர் வழக்கறிஞரும் ஆவார். 2016 சட்டமன்ற தோ்தலில் பத்மனாபபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். எனினும் தேமுதிகவை குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவுக்கு அந்த மாவட்டத்தில் உயர்த்தி கொண்டு வந்தார். கடைசி முயற்சியாக, கடந்த 6-ம் தேதி உள்ளாட்சி தோ்தலில் வேட்பாளர் தேர்வு செய்து சம்மந்தமான ஆலோசனை கூட்டம் நடத்தினார் ஜெகநாதன். இதில் தலைமையை பகிரங்கமாக விமர்சித்துள்ளார் ஜெகநாதன்.
மேலும் கலந்துகொண்ட ஒன்றிய நகர மாவட்டத்தை சோ்ந்த 53 நிா்வாகிகளில் 48 போ் அதிமுகவுடன் கூட்டணியே கூடாது என்று பெரிதாக பேசி உள்ளனர். இதை தீர்மானமாக போட்டு கட்சி தலைமைக்கும் மாவட்ட செயலாளராக இருந்த ஜெகநாதன் அனுப்பி வைத்தார். இதற்கு எந்த பதிலும் தலைமையிடம் இருந்து வரவில்லை என்று கூறப்படுகின்றது. இன்னொரு பக்கம் ஜெகநாதன் கட்சி மாற போவதாக தகவலும் கசிந்தது. ஆனால் அவரே அந்த முடிவுக்கு வருவதற்குள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, ஜெகநாதன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் தற்போது இணைந்துள்ளனரை்.
தற்போது விஜயகாந்தின் மனைவி கட்சியை நிர்வகிப்பதால், பெரும்பாலும் அவர் தனது தம்பி சுதீஷ்க்கே முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவதாக தெரிகிறது. இதனலேயே கட்சி தற்போது சுக்குநூறாக சொறுங்கி கொண்டும், மதிப்பிழந்து கொண்டும் செல்கின்றது.
மோசமான சூழலில் விஜயகாந்த் கட்சி: பிரேமலதாவால் கட்சிக்கு வந்த சோதனை -
Reviewed by Author
on
July 16, 2019
Rating:

No comments:
Post a Comment