பாவனைக்கு உதவாத உணவுப் பண்டங்களை வைத்திருந்த இருவர் மடு சுற்றுலா நீதிமன்றில் அபராதம் செலுத்தினர்
மடு பெருவிழாவின் போது பாவனைக்கு உதவாத உணவுப் பண்டங்களை வைத்திருந்ததாக மடு சுற்றுலா நீதிமன்றில் இருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டப் பணமும் விதிக்கப்பட்டது
கடந்த 23 ந் திகதி தொடக்கம் 02 ந் திகதி வரை மன்னார் மறைமாவட்டத்தின் மருதமடு ஆலய பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இருந்தபோதும் பக்தர்களின் வருகை மிக குறைவாக காணப்பட்டதால் உணவு கடைகளும் மிக சொற்பமாகவே வியாபாரத்தில் ஈடுபட்டன.
இவ் வேளையில் மடுப் பகுதி பொது செளவுக்கிய சுகாதார அதிகாரிகள் அப் பகுதியில் மேற்கொண்ட திடீர் பரிசோதனையில் அப்பகுதியில் நிலையான சிற்றுண்டிச்சாலை வைத்திருந்த இரு வர்த்தகர்கள் அகப்பட்டுக் கொண்டனர்.
ஒருவர் காலாவாதியான உப்பு மற்றும் பிஸ்கட் பக்கற்களை வைத்திருந்ததாக தெரிவித்து மடு சுற்றுலா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றநீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றபோது இவ் நபர் தனது குற்றத்தை ஏற்றுக் கொண்டமையால் இவருக்கு 1500ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மற்றைய கடையில் பழுதடைந்த பருப்பு கறி மற்றும் றோல்ஸ் காணப்பட்டமையால் அவ் கடை யில் வியாரபத்தில் ஈடுபட்ட நபரும் அகப்பட்டார்.
இவரும் தனது குற்றத்தை நீதிமன்றில் ஏற்றுக் கொண்டமையால் இவருக்கு நீதிபதி 2000 ரூபா அபாரதம் விதித்தார்.
பாவனைக்கு உதவாத உணவுப் பண்டங்களை வைத்திருந்த இருவர் மடு சுற்றுலா நீதிமன்றில் அபராதம் செலுத்தினர்
Reviewed by Author
on
July 04, 2019
Rating:

No comments:
Post a Comment