கொழும்பில் இன்று அதிகாலையில் துப்பாக்கி சூடு - ஒருவர் பலி - இன்னொருவர் ஆபத்தான நிலையில் -
கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொஹுவல, ஜம்புகஸ்முல்ல மாவத்தையில் இன்று அதிகாலை இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு மர்மநபர்கள் Land Cruiser வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றைய நபர் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உடுஹமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான ரணவக்க சுசில் ருவன் பெரேரா என்பவரே உயிரிழந்துள்ளார். அவர் அந்த வாகனத்தின் சாரதியாக செயற்பட்டுள்ளார்.
40 வயதான நபரே காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பில் இன்று அதிகாலையில் துப்பாக்கி சூடு - ஒருவர் பலி - இன்னொருவர் ஆபத்தான நிலையில் -
Reviewed by Author
on
July 28, 2019
Rating:

No comments:
Post a Comment