அண்மைய செய்திகள்

  
-

இலங்கையில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் சிக்கினான்! மிரண்டு போன பொலிஸார் -


இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனராக நடித்து கலவான மக்களை அச்சத்தில் வைத்திருந்த நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக கலவான, வெலிகும்புர மற்றும் அழுத்வத்தை ஆகிய பகுதிகளில் பெண்கள் பலரை அச்சப்படுத்திய செய்தி வெளியாகியிருந்தது.
அவ்வாறான செயல்களில் குள்ள மனிதர்கள் அல்லது வேற்று கிரகவாசிகள் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் பரவியது.

முகம் முழுவதும் முடி வளர்த்திருந்த இந்த உருவம் குள்ள மனிதனுக்கு சமமானதாக காணப்பட்டதாக மக்கள் குறிப்பிட்டனர்.
இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், எவரையும் கைது செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் கலவான பேருந்து நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்குரிய முறையில் நடந்து கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

34 வயதாக இந்த நபர் அக்குரஸ்ஸ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அவரது கையில் இருந்த பையை சோதனையிட்ட போது அதில் 25 ஆணுறைகளும், இறப்பரினால் செய்யப்பட்ட ஆணுறுப்பு ஒன்றும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு மக்களை பெரும் அச்சத்தில் வைத்திருந்த இந்த மர்மநபர், பாலியல் சம்பந்தமான பொருட்களுடன் சிக்கிய தொடர்பில் பொலிஸார் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இலங்கையில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் சிக்கினான்! மிரண்டு போன பொலிஸார் - Reviewed by Author on July 15, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.