அண்மைய செய்திகள்

recent
-

விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்திருந்தால் உங்களுக்கு இந்த தைரியம் வந்திருக்குமா! நாடாளுமன்றில் சீறிய சாள்ஸ்mp -


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் கன்னியாவில் இந்து மத குருமார் மீது இவ்வாறு சுடுதண்ணீர் ஊற்றியிருக்க முடியுமா? அவ்வாறு ஊற்ற அவர்களுக்கு தைரியம் வந்திருக்குமா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கடும் கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த வாரம் திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று தொடர்பாக அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை செய்திருந்தார்கள்.
அந்த போராட்டத்தில் தென்கயிலை ஆதீனம் மீது சூடான தேயிலை சாயம் ஊற்றப்பட்டது. அன்று அந்த சம்பவம் நடந்தபோது தென்கயிலை ஆதீனத்தை ஒரு பேச்சுவார்த்தைக்காக பொலிஸார்தான் அழைத்துச் செல்கின்றனர்.
இவ்வாறு பொலிஸார் அழைத்துச் சென்ற போது அங்கிருந்த சில காடையர்களால் இந்த சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

பொலிஸாரின் பாதுகாப்பில் செல்லும் ஒரு மதத் தலைவர் மீது இவ்வாறான மோசமான செயல் நடத்தப்பட்டபோது அதை பார்த்துக் கொண்டிருந்த பொலிஸாரோ அந்த மாவட்ட அதிகாரிகளோ ஏன் இதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை?
அன்று நடந்த அந்த சம்பவம் ஒரு பௌத்த மதகுருவுக்கு நடந்திருந்தால் இன்று இலங்கையில் இருக்கின்ற சிறுபான்மை மக்களுடைய நிலை என்ன?
இந்து மதத்தின் பிரதான குரு ஒருவருக்கு பொலிஸாரின் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம், பொலிஸாருக்கு தெரியும், யார் இதைச் செய்தார்கள் என்று தெரியும் ஆனால் ஏன் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.
சட்டம் ஒழுங்கு அமைச்சினை வைத்திருக்கக் கூடிய இந்த நாட்டினுடைய ஜனாதிபதி இது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் கூறவில்லை. அவர் இதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். நாட்டினுடைய பிரதமரும் இது தொடர்பில் கவனம் எடுக்க வேண்டும்.
அந்த போராட்டத்தின்போது பௌத்த குரு ஒருவர் ஒரு விடயத்தை கூறியிருந்தார். குறித்த இடத்தில் நின்று கொண்டிருந்த கத்தோலிக்க மத குருக்களைப் பார்த்து நீங்கள் திருக்கேதீஸ்வரத்தில் வளைவு கட்டுவதற்கு அனுமதி கொடுக்காமல் இங்கு வந்து வெளிப்பூச்சுக்காக ஏன் நிற்கின்றீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்.

அந்த காலம் முதல் தற்போது வரை, ஆயுதங்கள் கொண்டு போராடிய காலம் தொட்டு ஒற்றுமையாக ஒரே தலைமையின் கீழ் செயற்பட்டவர்கள் நாங்கள்.
தமிழர்களின் பிரதான மாவட்டமான திருகோணமலையில் இந்து குரு ஒருவர் மீது சுடுநீர் ஊற்ற முற்பட்டிருக்கின்றார்கள் என்றால் தமிழர்களின் சமய தலைவர்களை இந்த அரசாங்கம் எந்த இடத்தில் வைத்து பார்க்கின்றது என்பதுதான் இன்று பிரதானமான கேள்வியாக இருக்கின்றது.

தமிழர்களுக்கு இவ்வாறு ஏதும் நடந்தால் கேட்பதற்கு யாரும் இல்லை என்ற தைரியம் ஆட்சியாளர்களுக்கும் ஒரு சில மதகுருமார்களுக்கும் இருக்கின்றது.
நான் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் கன்னியாவில் இந்து மத குருமார் மீது இவ்வாறு சுடுதண்ணீர் ஊற்றியிருக்க முடியுமா? அவ்வாறு சுடுதண்ணீர் ஊற்ற உங்களுக்கு தைரியம் வந்திருக்குமா என அன்று சுடுதண்ணீர் ஊற்றியவர்களைப் பார்த்து கேட்க விரும்புகின்றேன்.
எனவே இது தொடர்பில் அரசாங்கம் கவனமெடுக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கின்றேன். தென்கயிலை ஆதீனம் மீது சூடான நீரை ஊற்றிய போது கத்தோலிக்க மத குருமார்களும் அங்கிருந்தனர்.

இதன்போது பௌத்த தேரர் ஒருவர், கத்தோலிக்க மத குருமாரை பார்த்து “திருக்கேதீஸ்வரத்தில் வளைவை கட்டுவதற்கு நீங்கள் அனுமதிக்கவில்லை. இங்கு வந்து கண்காட்சிக்காகவா நிற்கின்றீர்கள்” என கேட்டார்.
எனினும், திருக்கேதீஸ்வரத்தில் வளைவு கட்டுவது தொடர்பில் இரு தரப்பினர்களும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி, இணக்கப்பாட்டுடன் வளைவு மிக விரைவில் கட்டப்படும் என நான் கூறினேன்.
இது ஒரு சிறிய விடயம். எனினும், இதனை பெரிது படுத்தி வடக்கில் உள்ள மக்களை பிரிக்க வேண்டாம். மிக விரைவில் இரு தரப்பினர் இணக்கப்பாட்டுடன் வளைவு கட்டப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்திருந்தால் உங்களுக்கு இந்த தைரியம் வந்திருக்குமா! நாடாளுமன்றில் சீறிய சாள்ஸ்mp - Reviewed by Author on July 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.