பயங்கரவாதம் தொடர்பாக மன்னார் இளைஞர் யுவதிகளுக்கு விழிர்ப்புணர்வு செயலமர்வு-படம்
நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரவாதம், அடிப்படைவாதம் மற்றும் தீவரவாத செயற்பாடுகளின் போது இளைஞர்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் , இன,மத கலாச்சார ரீதியான பிரிவினைகள் மற்றும் முரண்பாடுகளை இளைஞர்கள் மத்தியில் தீர்த்துக் கொள்வது தொடர்பான செயலமர்வு இன்று புதன் கிழமை காலை 10 மணியளவில் மன்னார் வாழ்வுதயத்தில் மன்னார் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதி ஜோசப் நயன் தலைமையில் இடம் பெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த செயலமர்வு இடம் பெற்றது.
நாடளாவிய ரீதியில் ஏற்பாட்டு செய்யப்பட்டு இலங்கை முழுவதும் உள்ள 25 மாவட்டங்களிலும் குறித்த செயலமர்வு இடம் பெற்று வருகின்றது.
இன்று புதன் கிழமை (24) மன்னாரில் இடம் பெற்ற குறித்த செயலமர்வுக்கு பிரதம விருந்தினராக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மன்னார் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ரீ.பூலோகராஜா , இலங்கை இளைஞர் கழக சம்மேளன உப தலைவர் ஜசோதரன் , மடு இளைஞர் சேவை அதிகாரி ராகவேந்தர் ,மன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஜேசுராஜ் லோகு, உற்பட மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் பிரதி நிதித்துவபடுத்தும் வகையில் மும் மதங்களையும் சேர்ந்த இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.
குறித்த செயலமர்வு மூலம் இளைஞர் மத்தியில் சேகரிக்கப்படும் கருத்துக்கள் அனைத்தும் வருகின்ற மாதம் தேசிய ரீதியில் இடம் பெறவுள்ள இளைஞர் தினத்தின் போது விசேட அறிக்கையாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
July 25, 2019
Rating:

No comments:
Post a Comment