மன்னார் துயர்துடைப்பு மறுவழ்வு சங்கமும் 70 மாணவர்களும்....
ஐக்கிய இராச்சியத்தில் வாழும் இலங்கை தழிழ் கத்தோலிக்க மக்கள் தமது தாய் நாட்டில் பற்றுக்கொண்டு தமது உழைப்பில்,ஒரு சிறு பகுதியை தமிழ் கத்தோலிக்க ஒன்றியம் என்னும் ஸ்தாபனம் மூலம் பெற்றோரை இழந்த வறிய மாணவர்களுக்கான கல்விக்கு உதவி செய்வதில் பெருமையடைகின்றோம் என தமிழ் கத்தோலிக்க ஒன்றியத்தலைவர் திரு.வின்சென்ட் ஞானப்பிரகாசம் கூறினார்.
மேற்படி நிகழ்வு கடந்த மாதம் 22.06.2019ம் திகதி சனிக்கிழமை ம.து.ம.ச காரியாலயத்தில் நடைபெற்றது.
வண.பிதா.அ.சேவியர் குரூஸ் ம.து.ம.ச தலைவர் தமது உரையில் கடந்த 10 வருடங்களாக லண்டன் TCA இச்சங்க மூலம் 71 வறிய மாணவர்களுக்கும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கும் உதவி செய்து வருகின்றது.
இவர்களில் ஒரு சில சிறார்கள் 05ம் ஆண்டு புலமைப்பரிசிலும் மற்றும் கல்விப்பொது.தராதர சாதாரண உயர்தரப்பரீட்சையிலும் சிறந்த பெறுபேறுகளை பெறுவதுடன் மேலும் குறிப்பிட்ட தொகையினர் சில பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இச்சங்கத்தின் ஒர் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு தான் கலந்துக்கொண்டு மன்னார் மக்கள் சார்பில் லண்டன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியத்தலைவர் திரு.வின்சென்ட் ஞானப்பிரகாசம் ம.து.ம.சவின் சேவைகளை புகழ்ந்து பாராட்டினார்.

மன்னார் துயர்துடைப்பு மறுவழ்வு சங்கமும் 70 மாணவர்களும்....
Reviewed by Author
on
July 25, 2019
Rating:

No comments:
Post a Comment