அண்மைய செய்திகள்

recent
-

புண் மற்றும் அல்சருக்கு தீர்வு வேண்டுமா?


வயிறு மற்றும் சிறு குடல் சுவர்களில் ஏற்படும் புண்கள் தான் அல்சர் எனப்படுகின்றது.

அல்சரானது சரியாக சாப்பிடாமல், வயிற்றில் உணவைச் செரிக்க சுரக்கப்படும் அமிலமானது வயிற்றை அரிப்பதால் புண்கள் ஏற்படும்.
இது சிலருக்கு தாங்க முடியாத வலியை ஏற்படுத்தி விடுகின்றது.
அதுமட்டுமின்றி அல்சரை ஆரம்பத்திலேயே சரிசெய்து விட்டால், எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் அதையே கவனிக்காமல் விட்டுவிட்டால், அதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அளவில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகின்றது.
இதிலிருந்து எளிதில் விடுபட நாட்டு வைத்திய முறைகளே சிறந்தது என்று சொல்லப்படுகின்றது.
தற்போது அல்சரிலிருந்து விடுபட கீழ் குறிப்பிட முறைகளில் ஒன்றை பின்பற்றினாலே போதும்.

  • மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் வயிற்றுப் புண் மற்றும் அல்சர் விரைவில் குணமாகும்.
  • பச்சை வாழைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களை விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும்.
  • பாகற்காயை விட பாகற்பழம் சிறந்தது. இதனை சமைத்து உண்ண வயிற்றில் உள்ள கிருமிகளை அழிப்பதுடன் குடல் பலம் பெறும். மலத்தை இளக்கி வெளிப்படுத்துவதுடன் பித்தத்தை தணிக்கும்.
  • வாகை மரப்பிசினை பொடி செய்து பால் அல்லது வெண்ணெயில் கலந்து உட்கொண்டு வரலாம்.
  • தண்டுக் கீரையில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் மிகுந்துள்ளதால் உடல் குளிர்ச்சியடைந்து மூலநோய் மற்றும் குடல்புண் ஆறும்.
  • புழுங்கள் அரிசி சோற்றின் வடிகஞ்சியை வயிற்றுப் புண் உள்ளவர்கள் குடித்தால் நல்ல குணம் கிடைக்கும்.
  • துளசி இலை சாற்றில் மாசிக்காயை நன்கு இழைத்து அந்த விழுதை இருவேளை சாப்பிட்டு வரவும்.
  • மாவிலங்கும், நொச்சி, தழுதாழை இவற்றின் சாறு வகைக்கு 50 மிலி எடுத்து, அதில் 35 கிராம் பெருங்காயம் சேர்த்து காய்ச்சி, குழம்பு பதம் வந்ததும் பத்திரப்படுத்தி அதில் ஒரு கிராம் அலவு எடுத்து இரு வேளை சாப்பிட்டு வர வலியும், அல்சர் & குன்மம் கூட குணமாகும்
புண் மற்றும் அல்சருக்கு தீர்வு வேண்டுமா? Reviewed by Author on July 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.