கல்வி தான் எங்களது எதிர்காலம் என்பதை நாங்கள் நிரூபித்துக்காட்ட வேண்டும் -
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், முழங்காவில் மகாவித்தியாலயத்திலே தற்போது 1026 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இவர்களுக்கான தேவைகள் அதிகமாகவுள்ளன. குறிப்பாக ஆசிரியர் வளம் என்பதும் பாரிய பிரச்சினையாகவுள்ளது.
இந்த விடயங்களில் கவனமெடுத்து என்னால் உதவிகளை செய்துதர முடியும். நாங்கள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டிய தேவையுள்ளது.
கல்வி தான் எங்களின் எதிர்காலம் என்பதை மாணவர்களாகிய நீங்கள் நிரூபித்துக்காட்ட வேண்டும். பூநகரிப்பிரதேசத்தில் கம்பரலிய திட்டத்தின் கீழ் நூறு மில்லியன் ரூபா நிதியில் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முழங்காவில் பங்குத்தந்தை கிளிநொச்சி வலயக்கல்வித்திணைக்கள அதிகாரிகள், பூநகரிப்பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
கல்வி தான் எங்களது எதிர்காலம் என்பதை நாங்கள் நிரூபித்துக்காட்ட வேண்டும் -
Reviewed by Author
on
July 16, 2019
Rating:

No comments:
Post a Comment