திருகோணமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் பரிதாபமாக பலி -
திருகோணமலை-மட்கோ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த இளைஞன் திருகோணமலை-மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த சங்கல்ப ஜயசூரிய (26வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது படுகாயமடைந்தவர் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், திருகோணமலை-மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த சஜித் டில்சான் (23 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த இரண்டு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியமையினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் பரிதாபமாக பலி -
Reviewed by Author
on
July 24, 2019
Rating:

No comments:
Post a Comment