பிரான்சில் 140,000 பேர் வேலையிழக்கும் அபாயம்....
அது மட்டுமின்றி, பெல்ஜியம் அரசு மேற்கொண்ட அந்த ஆய்வு, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தங்கள் எதுவும் இன்றி வெளியேறுமானால், ஐரோப்பாவிலுள்ள அனைத்து நாடுகளிலுமே வேலையிழப்பு அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளது.
எல்லாவற்றையும் விட அதிக இழப்பு பிரித்தானியாவுக்குதான் என்று தெரிவித்துள்ள அந்த ஆய்வு, பிரித்தானியாவில் 526,830 பேர் வேலையிழப்பார்கள் என்று எச்சரிக்கிறது.
அதேபோல் பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் மோசமாக பாதிக்கப்பட உள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அதையடுத்து பாதிக்கப்பட உள்ள நாடு பிரான்ஸ், அதில் 1 முதல் 1.3 சதவிகித வேலை வாய்ப்பு இழப்பு ஏற்பட உள்ளது.
அதாவது 141,320 பேர் வேலையிழக்க உள்ளதாக அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், பிரித்தானியா, ஒப்பந்தம் ஒன்றுடன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுமானால், அப்போதும் வேலையிழப்பு இருக்கத்தான் செய்யும் என்றாலும் அந்த எண்ணிக்கை குறையும்.

பிரித்தானியா, ஒப்பந்தம் ஒன்றுடன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் பட்சத்தில் பிரித்தானியாவில் 139,860 பேரும் பிரான்சில் 34,500 பேரும் வேலையிழப்பார்கள்.
எப்படி இருந்தாலும், அதாவது பிரித்தானியா ஒப்பந்தம் ஒன்றுடன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறினாலும் சரி, அல்லது ஒப்பந்தங்கள் எதுவும் இன்றி வெளியேறினாலும் சரி, பிரான்சுக்கு இழப்புதான் என்று கூறுகிறது அந்த ஆய்வு.
பிரான்சில் 140,000 பேர் வேலையிழக்கும் அபாயம்....
Reviewed by Author
on
August 03, 2019
Rating:

No comments:
Post a Comment