உலகை அச்சுறுத்திய கொடிய நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு..! சாதனை படைத்த ஆராய்ச்சியாளர்கள் -
ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் ‘எபோலா’ எனும் வைரஸ் பரவியதைத் தொடர்ந்து, சுமார் 1800க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். உலகையே அச்சுறுத்திய இந்த வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர்.
அதன் விளைவாக தற்போது இரண்டு பரிசோதனை சிகிச்சைகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. இந்த இரண்டு மருந்துகளுக்கும் REGN-EB3 மற்றும் mAb114 என பெயரிடப்பட்டுள்ளது.
இவை ‘எபோலா’ வைரஸின் வளர்ச்சியைத் தடுத்து, மனித உயிரணுக்களில் அதன் தாக்கத்தை நடுநிலையாக்குகின்றன. எனவே, இந்த மருந்துகளின் மூலம் எபோலா-வில் இருந்து 90 சதவிதம் மீள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மருந்துகளின் சோதனை முடிவுகளும் கணிசமான விகிதங்களைக் காட்டிய பின்னர், எபோலா விரைவில் தடுக்கக்கூடிய மற்றும் சிகிச்சையளிக்கக்கூடிய நோயாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனைக்கு நிதியுதவி அளித்த அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் அமைப்பு, ‘எபோலா’விற்கு எதிரான போராட்டத்தில் இது மிகவும் நல்ல செய்தி என அறிவித்துள்ளது.
இந்நிலையில், காங்கோ ஜனநாயக குடியரசில் ‘எபோலா’வால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நோயாளிகளுக்கும் இந்த மருந்துகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
முன்னதாக, ZMapp மற்றும் Remdesivir எனப்படும் மற்ற இரண்டு சிகிச்சைகள் சோதனைகளில், குறைவான செயல்திறன் கொண்டவை என்று கண்டறியப்பட்டதால் அவை விலக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
உலகை அச்சுறுத்திய கொடிய நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு..! சாதனை படைத்த ஆராய்ச்சியாளர்கள் -
Reviewed by Author
on
August 14, 2019
Rating:

No comments:
Post a Comment