தினமும் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுங்க... நன்மைகள் ஏராளமாம் -
ஒரு பல் பூண்டில் 5 மி.கி கால்சியம், 12 மிகி பொட்டாசியம் மற்றும் 100 சல்ப்யூரிக் சேர்மங்கள் உள்ளதால், இது மருந்து மாத்திரைகளை விட சிறந்தது எனப்படுகின்றது.
அந்தவகையில் இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக உடலால் உறிஞ்சப்படும்.
மேலும் இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. தற்போது பூண்டினை தினமும் வெறும் வயிற்றில் உண்ணுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
- இரத்த அழுத்தத்திற்கு பூண்டு மிகச்சிறந்த மருந்து. அதிலும் இதனை வெறும் வயிற்றில் உட்கொண்டால், எவ்வித பக்கவிளைவுமின்றி இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும்.
- உட்காயங்கள் குணமாக கண்ட மாத்திரைகளைப் போடுவதைத் தவிர்த்து, பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.
- பூண்டை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொண்டதில், மூட்டு வலி மற்றும் ஆர்த்ரிடிஸ் பிரச்சனைக்கான அறிகுறிகள் குறைக்கும்.
- பூண்டு பல்வேறு வகையான பூஞ்சை தொற்றுகள், பாக்டீரியா தொற்றுக்களை தடுக்கவல்லது. பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலைத் தாக்கிய நோய்த்தொற்றுக்களில் இருந்து எளிதில் விடுபடலாம்.
- பூண்டையை பச்சையாக காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் ஏற்படுவதில் இருந்து விலகி இருக்கலாம்.
- பூண்டு நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தி, ஏராளமான நுரையீரல் பிரச்சனைகளான நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி, நெஞ்சு சளி, இருமல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
தினமும் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுங்க... நன்மைகள் ஏராளமாம் -
Reviewed by Author
on
August 14, 2019
Rating:

No comments:
Post a Comment