குப்பை பொறுக்கிய சிறுவனை படிக்கவைத்து அழகு பார்த்த பிரித்தானியர்கள்:
பிரித்தானியாவை சேர்ந்த கிறிஸ்டினா ராம்சே என்கிற சிறுமி தன்னுடைய 18 வயதில் உகாண்டா நாட்டிற்கு பள்ளியிருந்து சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு குப்பை பொறுக்கி கொண்டிருந்த ஜூலியஸ் முயோம்பியா என்கிற 18 வயது சிறுவனை சந்தித்துள்ளார். ஒரு அறை மட்டுமே கொண்ட அவனுடைய வீட்டில் 6 பேர் ஒன்றாக உறங்கி வந்துள்ளனர். மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் அவர்களுடைய வீட்டில் கிடையாது.

அந்த சிறுவனுக்கு சிறிதளவு மட்டுமே ஆங்கிலம் பேச முடியும். அவனை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என நினைத்த கிறிஸ்டினா, வேல்ஸ் நாட்டில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு சிறுவனின் குடும்ப புகைப்படத்தை அனுப்பி அவன் படிக்க விரும்புவதாக கடிதம் எழுதினார். அதேசமயம் சிறுவனுக்கு குடும்பத்திற்கு புதிதாக ஒரு வீடு கட்டிக்கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த அந்த ஆசிரியர்கள் மற்றும் நகரத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் பலரும் தங்களால் முடிந்த பணத்தை அனுப்பி சிறுவனை வேல்ஸ் நாட்டிற்கு வரவழைத்தனர்.
அங்கு அவன் தங்குவது மற்றும் மேல் படிப்பு என செலவுகள் அனைத்தையும் வேல்ஸ் நாட்டில் இருந்த மக்கள் பலரும் ஏற்றுக்கொண்டனர்.

குடும்ப கஷ்டத்தை நினைத்து பலமுறை அழுதாலும், கடினமான படித்து தற்போது வேல்ஸில் உள்ள பாங்கூர் பல்கலைக்கழகத்தில் வணிக மற்றும் சட்ட பிரிவில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஜூலியஸ், தன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பி குடிசையில் வாழும் மக்களுக்கு உதவ விரும்புவதாக கூறியுள்ளார். மேலும், தீவிர வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான லட்சியத்துடன் உகாண்டாவில் அரசியல் வாழ்க்கையைத் தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குப்பை பொறுக்கிய சிறுவனை படிக்கவைத்து அழகு பார்த்த பிரித்தானியர்கள்:
Reviewed by Author
on
August 14, 2019
Rating:
No comments:
Post a Comment