இலங்கை விரைகிறார் ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்!
ஐக்கிய நாடுகளின் மதசுதந்திரம் தொடர்பான விசேட அறிக்கையாளர் அஹ்மட் சஹீட் இலங்கை வருகிறார்.
எதிர்வரம் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார்.
இலங்கையில் மதங்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன.எவ்வாறு போற்றப்படுகின்றன என்பது குறித்து ஆராயவே இந்த பயணம் அமைகிறது.
இந்தநிலையில் இது தொடர்பில் திறந்த நிலை கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக அஹமட் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மதங்களை மையமாக கொண்ட இனங்களுக்கு இடையில் சமாதான சகவாழ்வை அரசாங்கம் எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறது என்பதையும் தாம் கண்டுகொள்ளவுள்ளதாக அஹமட் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பல்வேறு மத அமைப்புக்களை சந்திக்கவுள்ள அவர், ஆகஸ்ட் 26ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்ட செய்தியாளர்களுடன் சந்திப்பை நடத்தவுள்ளார்.
அதேநேரம் 2020ஆம் ஆண்டு அவர் தமது அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இலங்கை விரைகிறார் ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்!
Reviewed by Author
on
August 14, 2019
Rating:

No comments:
Post a Comment