இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட விசித்திர வாகனம்! ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமா? -
பயங்கரவாத விசாரணை பிரிவு நடத்தி விசாரணையின் போது குறித்த வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா பணியாற்றிய காலப்பகுதியில் ஜப்பானின் உதவியுடன் அதிக தொழில்நுட்பங்களை கொண்ட வாகனம் கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த வாகனம் பல கிலோமீற்றர் தூரத்தில் உள்ள ஒருவரை கண்கானிக்க கூடிய திறன் கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ட்ரோன் கமரா ஒன்று உள்ளடக்கப்பட்ட கமரா கட்டமைப்பு ஒன்றும் அந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் இலகுவாக எந்தவொரு நபரையும் அடையாளம் காண முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
அதில் விசேட கணினி கட்டமைப்பும் பொருத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கொலை செய்வதற்காக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா சூழ்ச்சி செய்தார் என கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணை குழுவினால் இந்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிக தொழில்நுட்ப திறன் கொண்ட இந்த வாகனம் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அஷு மாரசிங்கவினால், பயங்கரவாத விசாரணை பிரிவின் பதில் இயக்குனரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது, ஜப்பானின் தொழில்நுட்ப உபகரணங்கள் உள்ளடக்கப்பட்ட வாகனம் ஒன்று கிடைத்ததாகவும், 25 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து அதனை கண்கானிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட விசித்திர வாகனம்! ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமா? -
Reviewed by Author
on
August 04, 2019
Rating:

No comments:
Post a Comment