சுவிட்சர்லாந்தில் அசத்தலான சாதனை ஒன்றை படைத்த இந்தியர்!
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரை சேர்ந்தவர் அபய் லுனே (48). கண் மருத்துவரான இவர் சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் நடைபெற்ற triathlon எனப்படும் மூன்று விதமான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டார்.
அதன்படி 3.8 கிலோ மீட்டர் நீச்சல் அடிப்பது, 180 கிலோ மீட்டர் மிதிவண்டியில் பயணிப்பது, 42 கிலோ மீட்டர் ஓட்டபந்தயத்தில் பங்கேற்பது என இந்த மூன்றையும் 16 மணி நேரத்துக்குள் செய்து முடிக்க வேண்டும்.
ஆனால் அபய் இந்த மூன்று விளையாட்டையும் 14.32 மணி நேரத்திலேயே முடித்து அசத்தியுள்ளார்.

இந்த போட்டியில் 20 இந்தியர்கள் கலந்து கொண்ட நிலையில் அபய் உள்ளிட்ட 8 இந்தியர்கள் இதை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்கள்.
இது குறித்து அபய் கூறுகையில், போட்டி முடியும் வரை உடலில் சக்தி மற்றும் ஆற்றலை தக்க வைத்திருப்பதே பெரும் சவாலாக இருந்தது.
மூன்று போட்டிகளில் மிதி வண்டியை ஓட்டுவது தான் கடினமானதாக இருந்தது, ஏனெனில் மலை பகுதியில் மேலும் கீழும் செல்லும் பாதையில் மிதிவண்டியை ஓட்டுவது பெரும் சவால் ஆகும் என கூறியுள்ளார்.
மருத்துவர் அபய் கடந்த மூன்று ஆண்டுகளாகவே இந்தியாவில் மாரத்தான் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தில் அசத்தலான சாதனை ஒன்றை படைத்த இந்தியர்!
Reviewed by Author
on
August 13, 2019
Rating:
No comments:
Post a Comment