அமெரிக்காவில் புதிய விதிமுறை அமல்.. தமிழர்கள் உட்பட பலர் பாதிக்கப்படும் சூழல்! -
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், தங்கள் நாட்டில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற கொள்கையின் அடிப்படையில் அவர் பல விதிமுறை செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் மற்றொரு புதிய விதிமுறை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அமெரிக்காவில் Green card பெற்று குடியேறுவதற்கு, இந்தியா உட்பட மற்ற நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வருமானம் இருக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
இந்த விதிமுறையின் படி அரசின் மருத்துவக் காப்பீட்டு, ரேஷன் மானியம் போன்ற நலத்திட்டங்களை அவர்கள் சார்ந்திருக்காமல், வருமானம் அதிகப்படியாக இருக்க வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதனால் குறைந்த அளவு வருமானத்துடன் Green card-க்கு விண்ணப்பிக்கும் தமிழர்கள் உட்பட ஏராளமானோர் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த திடீர் அறிவிப்பால் சுமார் 4 லட்சம் விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்க அரசு இதுகுறித்து கூறுகையில், ‘இந்த புதிய விதிமுறையின் மூலம் அமெரிக்கர்களுக்கே அரசின் நலத்திட்டங்கள் அதிக அளவில் சென்றடையும். அமெரிக்காவில் வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறையும்’ என தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் புதிய விதிமுறை அமல்.. தமிழர்கள் உட்பட பலர் பாதிக்கப்படும் சூழல்! -
Reviewed by Author
on
August 13, 2019
Rating:

No comments:
Post a Comment