மன்னாரில் சைவ சமய எழுச்சி மாநாடு எதிர்வரும் புரட்டாதி மாத நடுப்பகுதியில்....
கெளரியுடனுறை திருக்கேதீச்சர பெருமான் அருளாட்சி புரிவதும் நாயன்மார்களால் தேவாரப்பதிகம் பாடப்பெற்றதுமான பெருமைக்குரிய
மன்னார் சிவபூமியில். சைவ சமய எழுச்சி மாநாடு எதிர்வரும் புரட்டாதி மாத நடுப்பகுதியில் மன்னாரில் நடைபெற ஆயத்த வேலைகள் நடைபெற்று வருவதாக மன்னார் இந்து குருமார் பேரவையின் தலைவரும் மன்னார் மாவட்ட அறநெறி பாடசாலைகள் இணையத்தின் தலைவர் சிவ ஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் மன்னாரில் மிகவும் சிறப்பான முறையில் சைவ சமய எழுச்சி மாநாடு ஒன்று நடைபெற இருக்கின்றது மாநாட்டிற்காக இலங்கை முழுவதும் இருந்தும் சகல அந்தன சிவாச்சாரிய பெருமக்கள் பேராசிரியர்கள் கல்விமான்கள் புத்திஜீவிகள் அறிவியலாளர்கள் மற்றும் இந்து சமய ஆன்றோர்கள் குருமகா சந்நிதானங்கள் இந்து மத நிறுவனங்கள் உட்பட ஆலய அறங்காவலர்கள் அறநெறிப்பாடசாலைகள் அன்பர்கள்அடியார்கள் அனைவரையும் ஒன்றிணைத்து.
மிகப் பிரம்மாண்டமான முறையில் மன்னாரில் ஒரு சைவ சமய எழுச்சி மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடாகி இருக்கிறது.
இந்நிகழ்வுக்கான ஆரம்ப வேலைகள் முடுக்கிவிடப்பட்டு இருக்கின்ற நிலையில் இது தொடர்பான பூரண வேலைத்திட்டங்கள் இம்மாத இறுதிக்குள் முடிந்து விடும் எனவும் இது தொடர்பாக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மக்களை ஒன்றிணைத்து மன்னாரில் ஒரு பெரு நிகழ்வாக இந்த நிகழ்வு அமையவிருப்பதாகவும் இதற்கான ஒத்துழைப்புக்களை நாம் அனைவரிடமும் வேண்டி நிற்பதாகவும்இது தொடர்பான முமையான நிகழ்வு ஒழுங்கு இம்மாத இறுதியில் வெளியிடபடும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மன்னாரில் சைவ சமய எழுச்சி மாநாடு எதிர்வரும் புரட்டாதி மாத நடுப்பகுதியில்....
Reviewed by Author
on
August 02, 2019
Rating:

No comments:
Post a Comment