இலங்கை தமிழ்பெண் சங்கீதா மீது நடிகர் விஜய்க்கு ஏற்பட்ட காதல்! திருமணத்தில் முடிந்தது.
விஜய் - சங்கீதாவின் காதல் கதை மிகவும் சுவாரசியமானது. பொதுவாக பிள்ளைகள் தான் தங்கள் காதலை, பெற்றோரிடம் தெரிவித்து, திருமணத்திற்கு சம்மதம் கேட்பார்கள்.
ஆனால், விஜயின் காதல் கதையில் இதற்கு நேர் மாறாக பெற்றோர்கள் தான் இவர்களது காதலை திருமணத்திற்கு எடுத்து சென்றனர்.
இலங்கை தமிழ் பெண்ணான சங்கீதா லண்டனில் வசித்து வந்த சமயம் அது.

பூவே உனக்காக படத்தை பார்த்து சிலாகித்து போன சங்கீதா, விஜயை பார்ப்பதற்காக லண்டனில் இருந்து சென்னைக்கு வந்தார்.
அந்த நேரத்தில் விஜய் காலமெல்லாம் காத்திருப்பேன் படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தார்.
அப்போது விஜய் தன்னுடைய வீட்டில் சந்தித்து பேசலாம் என்று சங்கீதாவிடம் கூறியிருக்கிறார்.
அந்த சமயத்தில் சங்கீதாவும், ஷோபாவும் பொதுவான விடயங்கள் குறித்து நிறைய பேசியதாகவும், சங்கீதா தான் எங்கள் மருமகளாக வரப்போகிறார் என அப்போது தெரியாது என்றும் ஷோபா கூறியிருக்கிறார்.

பின்னாளில், இரண்டாம் முறை வீட்டிற்கு வந்த போது தான், சந்திரசேகர் நேரடியாக சங்கீதாவிடம், விஜயை திருமணம் செய்துக் கொள்கிறாய என கேட்க, நீங்கள் என்ன செய்தாலும் சரி தான் அப்பா என பதிலளித்துள்ளார் சங்கீதா.
மிகவும் அமைதியான சுபாவம் கொண்ட விஜய் மனதில் இருந்த காதல், பிறகு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணமாக மாறியது.
இன்று இந்த தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்ற மகளும் உள்ளனர்.

இலங்கை தமிழ்பெண் சங்கீதா மீது நடிகர் விஜய்க்கு ஏற்பட்ட காதல்! திருமணத்தில் முடிந்தது.
Reviewed by Author
on
August 14, 2019
Rating:
No comments:
Post a Comment