முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ரஃபின் மண்ணில் நினைவு தின நிகழ்வு-
மறைந்த முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 19 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கத்தமுல் குர்ஆனும் துஆப் பிரார்த்தனையும் இன்று 16/09/2019 திங்கட்கிழமை காலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை மக்கள் பணிமனையில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும்,முன்னாள் இராஜாங்க அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஏ.எல். அப்துல் மஜீட், கல்முனை மாநகர சபை மேயர் சட்டத்தரணி ஏ.எம் ரகீப், , கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம் ரோஸன் அக்தார், ஏ.சி.ஏ சத்தார், எம்.எஸ் நிசார்(ஜேபி), எம்.எஸ் உமர் அலி, முன்னாள் மாநகர பிரதி முதல்வர் ஏ.ஏ. வஸீர், உட்பட கட்சியின் முக்கியஸ்தர்க பலரும் கலந்து கொண்டனர்
இதன்போது மறைந்த பெருந் தலைவர் அஷ்ரஃப் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி கட்சியின் தவிசாளர் ஏ.எல்.அப்துல் மஜிட் அவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டதுடன் மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காக விஷேட துஆப் பிரார்த்தனை நடைபெற்றது.
- நூருல் ஹுதா உமர் -

Reviewed by Author
on
September 17, 2019
Rating:

No comments:
Post a Comment