சர்க்கரை நோயாளிகள் எந்தெந்த கிழங்குகளை சாப்பிட கூடாது தெரியுமா?
அதிலும் குறிப்பாக கிழங்கு வகைகளைப் பொருத்தவரையில் பெரும்பாலும் தவிர்க்க வேண்டும்.
ஏனென்றால் கிழங்கு வகைகளில் அதிக அளவிலான கார்போஹைட்ரேட் இருக்கும்.
அந்தவகையில் சர்க்கரை நோயாளிகள் எந்தெந்த கிழங்குகளைச் சாப்பிடக்கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.

- சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வாழைக்கிழங்கு சாப்பிடக்கூடாது. ஏனெனில் உடல் சூட்டை தணிக்கும் என்பது உண்மை. ஆனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்துவிடும்.
- உருளைக்கிழங்கு சாப்பிட்டால் திசுக்களில் கொழுப்புச்சத்து அதிகரிக்கும். சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். உடலில் உள்ள செல்களில் கொழுப்பு படிய ஆரம்பிக்கும். அதனால் உருளைக்கிழங்கை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
- கொழுப்புச் சத்து மற்றும் மாவுச்சத்து கருணைக்கிழங்கில் உள்ளதால் இரண்டும் அதில் அதிகம் உள்ளதால் உடலில் உள்ள திசுக்களில் கொழுப்புக்கள் படிய ஆரம்பித்து விடும். அது இதய நோய்களுக்கு வழிவகுக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும்.
- சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழகை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். வாயுத்தொல்லையும் சிறுநீரகக் கோளாறும் உண்டாகும்.
- மரவள்ளிக்கிழங்கிலும் சர்க்கரை சத்து அதிகமாக உள்ளதால் இந்த கிழங்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும். வாயுத்தொல்லையை ஏற்படுத்தும். ரத்ததத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும்.
- சிகப்பு முள்ளங்கி ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். இதில் சர்க்கரைச் சத்தும் மாவுச்சத்தும் அதிகம்.
- பச்சை வேர்க்கடலை பச்சையாக அதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து விடும். தலைசுற்றல் உண்டாகும். கொழுப்பு படியும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும். அதனால் வேர்க்கடலையைத் தவிர்ப்பது நல்லது.
சர்க்கரை நோயாளிகள் எந்தெந்த கிழங்குகளை சாப்பிட கூடாது தெரியுமா?
Reviewed by Author
on
September 28, 2019
Rating:
No comments:
Post a Comment