அவுஸ்திரேலியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் மாயம்!
அவுஸ்திரேலியா - சிட்னி Strathfield பகுதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், அவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் தம்மைத் தொடர்புகொள்ளுமாறும் நியூசவுத் வேல்ஸ் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சக்திவேல் லோகநாதன்(28) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“சக்திவேல் லோகநாதன் கடைசியாக ஞாயிற்றுக்கிழமை (15.09.2019) பிற்பகல் 3 மணியளவில் Wollongong-க்கு அருகிலுள்ள Scarborough ரயில் நிலையத்தில் காணப்பட்டதாகவும், அதன் பின்னர் அவரிடமிருந்து எவ்வித தகவல்களும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இடத்திலுள்ள CCTV-யில் grey jacket, கருநீல tracksuit pants மற்றும் கருநீல ரீ-ஷேர்ட்டுடன் அவரது தோற்றம் பதிவாகியுள்ளது.
இந்தியப்பின்னணி கொண்ட சக்திவேல் லோகநாதன் IT துறையில் பணிபுரிபவர் என்றும் Wollongong பகுதிக்கு அவர் ஏன் சென்றார் என்பது தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குப் பின்னர் அவர் தனது வங்கிக்கணக்கைப் பயன்படுத்தவில்லை என்றும் எவ்வித தொடர்பாடல்களையும் மேற்கொண்டிருக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் Crimestoppers-ஐ 1800 333 000 என்ற இலக்கத்திலோ அல்லது https://nsw.crimestoppers.com.au/ என்ற இணையத்தளத்திலோ தொடர்புகொள்ளுமாறு நியூசவுத் வேல்ஸ் காவல்துறை கோரியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் மாயம்!
Reviewed by Author
on
September 18, 2019
Rating:
Reviewed by Author
on
September 18, 2019
Rating:


No comments:
Post a Comment