மது அருந்தி பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொண்டவர்களுக்கு அபராதத்துடன் சமூதாய சீர்திருத்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உத்தரவு
மது பானங்களுக்கு அடிமைகளாகி பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து
கொள்வோருக்கு எதிராக மன்னார் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட
குற்றவாளிகள் ஏழு பேரை சமூதாய சீர்திருத்த கட்டளை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மது பானங்களுக்கு அடிமைகளாகி பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொண்டஎட்டு பேர்களுக்கு எதிராக தனித் தனி வழக்குகளை பொலிசார் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வியாழக் கிழமை 19.09.2019 தாக்கல் செய்திருந்தனர்.
மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா
முன்னிலையில் இவ் வழக்குகள் விசாரனைகளுக்கு எடுக்கப்பட்டபோது இதில் ஏழு பேர் தங்கள் குற்றங்களை ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து ஒவ்வொருவருக்கும் தலா ரூபா ஐயாயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் தலா ஐம்பது மணித்தியாலங்கள் சமூதாய சீர்திருத்த கட்டளை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதில் ஒரு நபர் பொது இடத்தில் மது பானத்தை வைத்து அருந்திக்
கொண்டிருந்ததாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேர்
கொண்ட ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் கிராம அலுவலகரின் உறுதிப்படுத்தப்பட்ட கடிதமும் ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவித்து இவ் வழக்கை எதிர்வரும் 16.01.2020 வரை நீதவான் ஒத்திவைத்துள்ளார்.

Reviewed by Author
on
September 20, 2019
Rating:

No comments:
Post a Comment