இலங்கையர்கள் பலர் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக வர முயற்சி! -
அண்மைக் காலமாக அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக வர முயலும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கைக்கான மேஜர் ஜெனரல் கிராக் புர்னி தெரிவித்திருக்கிறார்.
கடந்த மே மாதம் முதல் அவுஸ்திரேலியா வர முயன்ற 38 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டிருக்கிறார்.
நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்ட அவர், “அவுஸ்திரேலியாவில் உள்ள அரசியல் சூழல், தேர்தல் மற்றும் இலங்கையில் நிகழ்ந்த துயர்நிறைந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் படகு வழியாக வர முயல்பவர்களின் எண்ணிக்கையை சற்று அதிகரித்திருக்கலாம்” எனக் கூறியிருக்கிறார்.
அதே சமயம் படகு வழியாக வர முயல்பவர்களை அனுமதிப்பதற்கான எந்தவிதமான வாய்ப்பும் கிடையாது என சுட்டிக்காட்டியிருக்கிறார்.
“எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைக்கு (Operation Sovereign Borders) முன்னரான 2008- 2013 காலக்கட்டத்தில் 820 படகுகளில் சுமார் 50,000 பேர் வந்துள்ளனர்.
1,200 க்கும் மேற்பட்டோர் கடலில் உயிரிழந்திருக்கின்றனர். ஆனாலும் இனி அதுபோல நிகழ ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்,” என மேஜர் ஜெனரல் கிராக் புர்னி கூறியுள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கை நடைமுறைக்கு வந்தது முதல் இதுவரை 37 படகுகளில் வந்த 865 பேர் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கிறார் புர்னி.
அவ்வாறு இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா வர முயன்ற 204 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையர்கள் பலர் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக வர முயற்சி! -
Reviewed by Author
on
September 05, 2019
Rating:

No comments:
Post a Comment