தினமும் இரவில் இந்த டீயை குடிங்க...நன்மைகளை வாரி வழங்குகின்றதாம்!
சீரகத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்றவை அடங்கியுள்ளது.
சீரகத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து டீ தயாரித்து தினமும் இரவில் படுக்கும் முன் குடித்து வந்தால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என சொல்லப்படுகின்றது.
அந்தவகையில் இந்த அற்புத டீயைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.
தேவையான பொருட்கள்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- எலுமிச்சை - பாதி
- தேன் - சுவைக்கேற்ப
- தண்ணீர் - 1 1/4 டம்ளர்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 1 1/4 டம்ளர் நீரை ஊற்றி, அதில் சீரகத்தைப் போட்டு, ஒரு டம்ளராகும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.பின் அதை இறக்கி வடிகட்டி, அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து கொண்டால், சீரக டீ தயார்.

நன்மைகள்
- தினமும் இரவில் படுக்கும் முன் சீரக டீயை மறக்காமல் குடித்து வாருங்கள். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, சீரக டீயை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
- சீரக டீயை ஒருவர் தினமும் குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறையும்.
- சீரக டீயை தினமும் இரவில் குடித்து வந்தால், உடலினுள் தேங்கி இருக்கும் அதிகப்படியான நச்சுக்கள் நீங்கி, உடல் சுத்தமாக வைத்து இருக்கும்.
- தினமும் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் குடியுங்கள். இதனால் மலச்சிக்கல் பிரச்னை உடனே சரியாகிவிடும்.
- சீரகத்தில் உள்ள இரும்புச்சத்து நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தும். இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவியாக இருக்கும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், தொற்றுக்களின் அபாயத்தைக் குறைக்கும்.
- தினமும் ஒரு டம்ளர் சீரக டீயைக் குடித்து வந்தால், உடலில் இரும்புச்சத்தின் அளவு அதிகரித்து, இரத்த சோகை பிரச்சனை நீங்கும்.
- சீரக டீயை தினமும் தவறாமல் குடியுங்கள். இதனால் மார்பு பகுதியில் சளி தேங்குவது தடுக்கப்படுவதோடு, தொடர்ச்சியான இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம்.
- சீரக டீயை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது பித்த நீர் உற்பத்திக்கு உதவி புரிந்து, கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
தினமும் இரவில் இந்த டீயை குடிங்க...நன்மைகளை வாரி வழங்குகின்றதாம்!
Reviewed by Author
on
September 08, 2019
Rating:
No comments:
Post a Comment