மன்னார் கலைஞர்கள் இருவருக்கு வட மாகாண பண்பாட்டு பெருவிழாவில் இளங்கலைஞர் விருது-படங்கள்
வவுனியாவில் இடம்பெற்ற வட மாகாண பண்பாட்டு பெருவிழாவின் 11/10/2019 முதலாம் நாள் நிகழ்வில் 13 பேருக்கு இளம் கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது.
வடமாகாண பண்பாட்டு பெருவிழாவானது வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இரு அமர்வுகளாக நடைபெற்றிருந்தன.
வட மாகாண பண்பாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் காலை அமர்வு அமரர் பொன் பூலோசிங்கம் அரங்கில் இடம்பெற்றிருந்தது.
இதில் கலைநிகழ்வுகள், ஆய்வரங்கு உள்ளிட்ட நடத்தப்பட்தோடு
மாலை அமர்வு வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுஜீவா ஜீபவதாஸ் தலைமையில் அமரர் வேலுப்பிள்ளை சிவசேகரம் அரங்கில் நடத்தப்பட்டது.
இதன்போது ஊடகம், கைவினை,சிற்பம்,ஓவியம்,புகைப்படம், நாட்டுக்கூத்து, நடனம், இசை, கலை உள்ளிட்ட 13 துறைகளுக்கான இளம் கலைஞர் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
மன்னார் கலைஞர்கள் இருவருக்கு
- மாந்தை மேற்கு இத்திக்கண்டலைச்சேர்ந்த அங்குச்சாமி ஸ்ரீ கவியழகன் கைவினைத்துறைக்காகவும்
- மாந்தை மேற்கு காத்தான்குளத்தினைச்சேர்ந்த சிமியோன் பெலிக்ஸ் ஜெனிவர் ஓவியத்துறைக்காகவும் 2019 ஆண்டுக்கான இளம் கலைஞர் விருதினை பெற்றுள்ளனர்.
இளம் கலைஞர் விருது பெற்ற மன்னார் கலைஞர்கள் இருவருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்
தொகுப்பு -வை.கஜேந்திரன்BA-

மன்னார் கலைஞர்கள் இருவருக்கு வட மாகாண பண்பாட்டு பெருவிழாவில் இளங்கலைஞர் விருது-படங்கள்
Reviewed by Author
on
October 12, 2019
Rating:

No comments:
Post a Comment