செவ்வாய் கிரகத்தில் பூமியைப்போல் உப்பு ஏரிகள்! ஆய்வுத் தகவல் -
நாசா உட்பட பல விண்வெளி ஆய்வு மையங்கள் செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்த ஆய்வுகள் குறித்து Nature Geoscience இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், ‘செவ்வாய் கிரகத்தில் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கேல் க்ரேட்டர் பள்ளத்தில் உள்ள ஏரி, 95 மைல் அகலமுள்ள ஒரு பிரம்மாண்டமான பாறைப்படுகை, 2012 முதல் நாசா கியூரியாசிட்டி ரோவர் மூலம் ஆராயப்பட்டு வருகிறது.
சுமார் 3.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் ஒரு விண்கல் தாக்கியபோது கேல் பள்ளம் உருவானது. இதனால் ஒரு காலத்தில் அங்கு உப்பு ஏரிகள் இருந்துள்ளன. அவை பூமியில் இருந்ததைப் போலவே ஈரமான மற்றும் வறண்ட கட்டங்களைக் கடந்து வந்துள்ளன.
கிரகத்தின் காலநிலை நீண்ட காலமாக வறண்டு போய் இருக்கிறது. செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் மெல்லியதாக மாறியதால், அங்கு திரவ நீர் நிலைத்திருக்காமல் ஆவியாகியது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் இணை ஆசிரியர் மரியன் நாச்சன் கூறுகையில், ‘புவியியல் நிலப்பரப்புகள் செவ்வாய் கிரகத்தின் வரலாற்றைப் பதிவு செய்துள்ளன. இந்த ஏரிகள் எவ்வளவு பெரியவை என்று சரியாக கூறுவது கடினம். ஆனால் கேல் க்ரேட்டரில் உள்ள ஏரி நீண்ட காலமாக இருந்தது. குறைந்தது நூற்றுக்கணக்கான ஆண்டுகள் முதல் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வரை இருந்துள்ளன.
ஆல்டிபிளானோ ஒரு வறண்ட, உயரமான பீடபூமி ஆகும். அங்கு மலைத்தொடர்களில் இருந்து வரும் ஆறுகள் மற்றும் நீரோடைகள் கடலுக்கு செல்லவில்லை. ஆனால், செவ்வாய் கிரகத்தில் கேல் பள்ளத்தில் நடந்ததைப் போலவே மூடிய படுகைகளுக்கு இட்டுச்செல்கின்றன.
இந்த நீர்நிலை காலநிலைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நீர் மட்டங்களைக் கொண்ட ஏரிகளை உருவாக்குகிறது. வறண்ட காலங்களில் ஆல்டிபிளானோ ஏரிகள் ஆவியாதல் காரணமாக மேலோட்டமாக வறண்டு போகிறது. மேலும் சில முற்றிலும் வறண்டு போகின்றன’ என தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்தில் பூமியைப்போல் உப்பு ஏரிகள்! ஆய்வுத் தகவல் -
Reviewed by Author
on
October 20, 2019
Rating:
No comments:
Post a Comment