ஐஸ்வர்யா ராயைப் பார்த்து தான்.. பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற சென்னை பெண்! -
துபாயில்‘மிஸ் சூப்பர் குளோப்’ பிரபஞ்ச அழகி போட்டி நடந்தது. இதில் 22 நாடுகளை சேர்ந்த அழகிகள் போட்டியாளராக பங்கேற்றனர். இவர்களில் சென்னையைச் சேர்ந்த அக்ஷரா ரெட்டியும் கலந்துகொண்டார்.
இவர்கள் அனைவரும் ஒய்யார நடை, பொது அறிவு கேள்வி சுற்று உள்ளிட்ட பல்வேறு சுற்றுகள் வாரியாக தேர்வு செய்யப்பட்டனர். இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்றில் 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அப்போது ‘உலக தலைவர்களை நோக்கி கேள்வி எழுப்பிய 16 வயது மாணவி யார்?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு கிரெட்டா தன்பெர்க் என சென்னையைச் சேர்ந்த அக்ஷரா ரெட்டி சரியான பதிலளித்தார். இறுதியில் அவர் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார். இந்நிலையில் நேற்றைய தினம் சென்னையில் பேட்டியளித்த அக்ஷரா ரெட்டி, பிரஞ்ச அழகி பட்டம் வென்றது குறித்து தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ‘மொடலிங் என்பது சிறுவயதில் இருந்தே என்னுடைய உணர்வாக இருந்தது. விளையாட்டு துறையில் சாதிப்பவர்களை பார்த்து, நாமும் ஏதாவது சாதித்து நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பது என்னுடைய லட்சியம். அதே சமயத்தில் ‘மொடலிங்’ துறையில் இருக்கும் என்னால் நாட்டுக்கு பெருமை சேர்க்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துகொண்டே இருந்தது.
இதற்காக நான் கடுமையாக உழைத்துக்கொண்டே இருந்தேன். ‘மிஸ் சூப்பர் குளோப்’ பட்டம் வென்றது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தாய்மை குறித்து நான் கூறிய பதில் எனக்கு புள்ளிகளை ஈட்டிக்கொடுத்தது. இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்றில் 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அப்போது, என்னுடைய குழந்தை பருவத்தை திருடிவிட்டீர்கள்.
என்னுடைய கனவை கலைத்துவிட்டீர்கள்’ என்று பள்ளி செல்லும் 16 வயது மாணவி உலக தலைவர்களை நோக்கி கூறினார், அவர் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்வி கேட்ட உடனே அனைவரும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண் தான் கூறியிருப்பார் என்று நினைத்தார்கள்.
சுற்றுச்சூழலுக்காக போராடி வரும் சுவீடன் நாட்டு பெண்ணான கிரெட்டா தன்பெர்க் என்பதை அறிந்துகொண்டு, நான் அதனை விடையாக கூறினேன். இதற்கும் எனக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைத்தது. கடுமையாக உழைத்ததன் மூலம் ‘மிஸ் சூப்பர் குளோப்’ பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். தினந்தோறும் சராசரியாக 3 மணி நேரம் உடற்பயிற்சிக்காக செலவிட்டேன். உலக அழகி பட்டம் வெல்லவேண்டும் என்பதை நினைத்து தூக்கம் இல்லாமல் தவித்தேன். பட்டம் பெற்றதன் மூலம் என்னுடைய கனவு நனவாகி இருக்கிறது. இந்த பட்டத்தை வெல்ல என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் மிகவும் உதவிகரமாக இருந்தார்கள்.
தமிழ் திரையுலகில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நல்ல நடிகர்கள் அனைவரோடும் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஐஸ்வர்யாராய், சுஷ்மிதா சென் ஆகிய 2 பேரையும் பார்த்து தான் எனக்கு உலகி அழகி பட்டம் பெற வேண்டும் என்ற ஊக்கம் வந்தது’ என தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராயைப் பார்த்து தான்.. பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற சென்னை பெண்! -
Reviewed by Author
on
October 24, 2019
Rating:
Reviewed by Author
on
October 24, 2019
Rating:


No comments:
Post a Comment