இலங்கை தேசிய நல்லிணக்கத்திற்கு ஜனாதிபதித் தேர்தல் முக்கியமானது -
இலங்கை மறுசீரமைப்பு மற்றும் தேசிய நல்லிணக்கத்தின் முன்னேற்றம் நோக்கிச் செல்லும் பயணத்தில் ஜனாதிபதித் தேர்தல் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளனர்.
இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை வந்துள்ளனர்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் உட்பட 5 சந்தர்ப்பங்களில் தமது பிரதிநிதிகள் இலங்கையில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இலங்கையின் ஜனநாயக செயற்பாடுகளை வலுப்படுத்த வழங்கும் உதவியாக இதனை கருத முடியும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் உப தலைவர் பெட்ரிகா மோகாரின் தெரிவித்துள்ளார்.
தமது கண்காணிப்பு பணிகளை முழுமையான வெளிப்படைத்தன்மையும் மேற்கொள்ள போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
30 பிரதிநிதிகளை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் நிரந்தர கண்காணிப்பு குழுவை ஒன்றியம் இலங்கைக்கு அனுப்பியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் இறுதி வாரத்தில் மேலும் 30 தற்காலிக கண்காணிப்பாளர்கள் இவர்களுடன் இணைந்துக்கொள்ள உள்ளனர்.
நவம்பர் 16ஆம் திகதி தேர்தல் முடிவடைந்த பின்னர் அடிப்படை அறிக்கையை வழங்க உள்ளதுடன் அதன் பின்னர் பரிந்துரைகள் மற்றும் கண்காணிப்புகள் உள்ளடங்களாக முழுமையான அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட உள்ளது.

Reviewed by Author
on
October 24, 2019
Rating:

No comments:
Post a Comment