சாவைக் கண்டு அஞ்சவில்லை: பிரித்தானியாவில் கவனத்தை ஈர்க்கும் இலங்கை தமிழர் -
சர்வதேச ஊடகம் ஒன்றில் செய்தியாளராக ஜோர்ஜ் அழகையா பணியாற்றி வந்த காலகட்டத்தில் 2014 ஆம் ஆண்டு அவருக்கு குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னர் 2017 ஆம் ஆண்டு மீண்டும் புற்றுநோய் தாக்குதல் ஏற்பட்டதாகவும் அவர் தெரியப்படுத்தினார்.
ஒருபோதும் தாம் மரணத்திற்கு அஞ்சுபவனல்ல என குறிப்பிட்டுள்ள ஜோர்ஜ் அழகையா, கண்டிப்பாக இன்று அல்லது நாளை அது நேரும் என்பதில் சந்தேகம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் 1976 முதல் தம் மீது அன்பும் அக்கறையும் செலுத்திவரும் தமது மனைவி Frances தொடர்பிலே தமக்கு வருத்தம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தற்போது 63 வயதான ஜோர்ஜ் அழகையாவுக்கு ஆதாம் மற்றும் மத்தேயு என இரு பிள்ளைகள்.

கொழும்பில் பிறந்த இவர் 1961 ஆம் ஆண்டு பெற்றோருடன் கானாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கேயே தமது துவக்க பாடசாலை காலத்தை முடித்துள்ளார்.
பின்னர் இங்கிலாந்தின் Portsmouth பகுதியில் தமது உயர்நிலை பாடசாலை கல்வியை முடித்துள்ளார். தொடர்ந்து டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ளார். அங்கேயே தமது வாழ்க்கை துணையான Frances-ஐ சந்தித்துள்ளார்.
சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தாலும், அந்த நோயானது இவரது கல்லீரலில் பரவியது.

இதனால் ஐந்து அறுவை சிகிச்சையும் 17 முறை கீமோதெரபியும் எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஆனால் அவரது கல்லீரலில் பெரும்பகுதியானது அப்புறப்படுத்தப்பட்டது. 2015 ஆம் ஆண்டு மீண்டும் பணிக்கு திரும்பிய அவர் 2017 ஆம் ஆண்டு மீண்டும் தமக்கு புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
அதிக ஊதியம் பெறும் ஊடகவியலாளர்களில் ஜோர்ஜ் அழகையாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாவைக் கண்டு அஞ்சவில்லை: பிரித்தானியாவில் கவனத்தை ஈர்க்கும் இலங்கை தமிழர் -
Reviewed by Author
on
October 31, 2019
Rating:
No comments:
Post a Comment