சிறுநீரக புற்றுநோய் யாருக்கெல்லாம் வரும் தெரியுமா?
இந்த புற்றுநோய் பெரும்பாலும் 45 வயதிற்கு மேல் தான் ஒருவரைத் தாக்கும்.
இந்தவகை புற்று நோய்பெரும்பாலும் நேரடியாக ஒருவரைத் தாக்குவதில்லை.
மேலும் பல ஆபத்துக் காரணிகள் புற்றுநோயை உண்டாக்குவதில்லை. சில சமயங்களில் தெரியாத காரணிகளாலும் புற்றுநோய் தாக்கக்கூடும் எனப்படுகின்றது.
அந்தவகையில் சிறுநீரக புற்றுநோயின் ஆபத்துக் காரணிகளைக் என்னென்ன என்பதை பார்ப்போம்.

- புகைப்பிடிப்பதால் சிறுநீரக புற்றுநோயின் அபாயம் இரண்டு மடங்கு அதிகரிக்கும். அதிலும் புகைப்பிடிப்பதால் ஆண்களுக்கு 30% சிறுநீரக புற்றுநோயும், பெண்களுக்கு 25% சிறுநீரக புற்றுநோயும் வருவதற்கான அபாயம் உள்ளதாக நம்பப்படுகிறது.
- பெண்களை விட ஆண்களுக்கு தான் சிறுநீரக புற்றுநோயின் அபாயம் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.
- சிறுநீரக புற்றுநோயால் கருப்பின மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
- சிறுநீரக புற்றுநோய் பொதுவாக பெரியவர்களிடம் தான் காணப்படுகிறது. அதிலும் 50 முதல் 70 வயது வரை உள்ளவர்களிடம் கண்டறியப்படுகிறது.
- குண்டாக உடல் பருமனுடன் உள்ளவர்களுக்கும், சிறுநீரக புற்றுநோய்க்கும் தொடர்பு உண்டு. எனவே உடல் பருமனுடன் இருப்பவர்கள், அதைக் குறைக்கும் முயற்சியில் உடனே இறங்க வேண்டும்.
- ஆண்கள் உயர் இரத்த அழுத்தத்துடன் இருந்தால், அவர்களுக்கு சிறுநீரக புற்றுநோயின் அபாயம் அதிகம் உள்ளது.
- நீர்ப்பெருக்கிகள் மற்றும் வலி நிவாரண மாத்திரைகளான ஆஸ்பிரின், அசிட்டமினோபென் மற்றும் ஐபுரோஃபென் போன்றவைகளும் சிறுநீரக புற்றுநோயுடன் தொடர்பு கொண்டுள்ளது.
- பேட்டரி கம்பெனிகள், பெயிண்ட் கம்பெனிகள் அல்லது வெல்டிங் கடைகளில் வேலை செய்பவர்களுக்கு, சிறுநீரக புற்றுநோயின் அபாயம் அதிகம் உள்ளது.
- சிறுநீரக செயல்பாடு பல நாட்களாக மோசமாக உள்ளவர்களுக்கு சிறுநீரக புற்றுநோயின் அபாயம் அதிகம் உள்ளதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
- யார் ஒருவர் பல நாட்களாக டயாலிசிஸ் மேற்கொண்டு வருகிறார்களோ, அவர்களுக்கு சிறுநீரகங்களில் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சிக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
- பரம்பரையில் யாருக்கேனும் சிறுநீரக புற்றுநோய் இருந்தால், அந்த பரம்பரையை சேர்ந்தவர்களுக்கு சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.
சிறுநீரக புற்றுநோய் யாருக்கெல்லாம் வரும் தெரியுமா?
Reviewed by Author
on
October 11, 2019
Rating:
No comments:
Post a Comment