கால் நடைகளின் மேய்ச்சல் நிலமாக தெரிவு செய்யப்பட்ட பகுதியில் விவசாய நடவடிக்கை-நானாட்டான் பிரதேச சபை தலைவர் தி.பரஞ்சோதி
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் நானாட்டான் பிரதேச செயலகத்தினால் கால் நடைகளின் மேய்ச்சல் நிலமாக அறிவிக்கப்பட்ட கட்டையடம்பன் பகுதியில் பெரும்போக விவசாயம் செய்வதற்கு அபிவிருத்தி வேலைகள் நடை பெறுவதாக நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி குற்றம் சாட்டியுள்ளார்.
-இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கால் நடைகளுக்கு உரிய மேய்ச்சல் நிலம் இல்லாததால் கால் நடைகளும் அவற்றை பராமரிக்கும் பண்ணையாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுவதாக தொடர்ச்சியாக பண்ணையாளர்கள் முறையிட்டு வந்துள்ளனர்.
நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட கட்டையடம்பன் பகுதியில் மேய்ச்சல் நிலம் இனங்காணப்பட்ட போதும் பிற திணைக்களங்களும் அதில் சம்பந்தப்பட்ட படியினால் அவை முழுமை பெறாமல் இருக்கிறது.
ஆனால் தற்போது மேய்ச்சல் நிலமாக இனங்காணப்பட்ட பகுதியில் பெரும்போக நெற்செய்கைக்கான அபிவிருத்தி வேலைகள் நடை பெற்று வருகிறது.
உரிய பகுதியை அளவீடு செய்து விரைவாக முடிக்க வேண்டிய வேளையில் சில அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் கால் நடைகளும் பண்ணையாளர்களும் பாதிக்கப்பபடுகின்றார்கள்.
-எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையினை விரைந்த எடுக்க வேண்டும் என நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி கோரிக்கை விடுத்தார்.
-இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கால் நடைகளுக்கு உரிய மேய்ச்சல் நிலம் இல்லாததால் கால் நடைகளும் அவற்றை பராமரிக்கும் பண்ணையாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுவதாக தொடர்ச்சியாக பண்ணையாளர்கள் முறையிட்டு வந்துள்ளனர்.
நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட கட்டையடம்பன் பகுதியில் மேய்ச்சல் நிலம் இனங்காணப்பட்ட போதும் பிற திணைக்களங்களும் அதில் சம்பந்தப்பட்ட படியினால் அவை முழுமை பெறாமல் இருக்கிறது.
ஆனால் தற்போது மேய்ச்சல் நிலமாக இனங்காணப்பட்ட பகுதியில் பெரும்போக நெற்செய்கைக்கான அபிவிருத்தி வேலைகள் நடை பெற்று வருகிறது.
உரிய பகுதியை அளவீடு செய்து விரைவாக முடிக்க வேண்டிய வேளையில் சில அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் கால் நடைகளும் பண்ணையாளர்களும் பாதிக்கப்பபடுகின்றார்கள்.
-எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையினை விரைந்த எடுக்க வேண்டும் என நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி கோரிக்கை விடுத்தார்.
கால் நடைகளின் மேய்ச்சல் நிலமாக தெரிவு செய்யப்பட்ட பகுதியில் விவசாய நடவடிக்கை-நானாட்டான் பிரதேச சபை தலைவர் தி.பரஞ்சோதி
Reviewed by Author
on
October 19, 2019
Rating:

No comments:
Post a Comment