29 பேர் பலி -குடியிருப்பு பகுதியில் பயணிகள் விமானம் பாய்ந்து பயங்கர விபத்து..
மக்கள் தொகை அதிகமுடைய கோமா நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியிலே இவ்விபத்து ஏற்பட்டது. விமானத்தில் 17 பயணிகள், 2 விமானக்குழுவினர் என 19 பேர் பயணித்தாக கூறப்படுகிறது.
கோமா நகரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 350 கி.மீ தொலைவில் உள்ள பெனி நகருக்கு புறப்பட்ட பிஸி பீ நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
விமானத்தில் பயணித்த 19 பேர்களில் உயிர் பிழைத்தவர்கள், தரையில் காயமடைந்தவர்கள் என மொத்தம் 16 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வடக்கு கிவு பிராந்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது வரை இடிபாடுகளிலிருந்து 29 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அரசு வெளியிடட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விமானி விமானத்தை டேக் ஆப் செய்ய தோல்வியுற்றதால் விபத்து ஏற்பட்டது என்று நோர்ட் கிவு கவர்னர் கார்லி நன்சு காசிவிதா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், தொழில்நுட்ப சிக்கலால் விபத்து ஏற்பட்டதாக விமான நிறுவனத்தின் பராமரிப்பு ஊழியர்களில் ஒருவர் தெரிவித்துள்ளதாக உள்ளுர் ஊடகம் மேற்கோள் காட்டியுள்ளது.
29 பேர் பலி -குடியிருப்பு பகுதியில் பயணிகள் விமானம் பாய்ந்து பயங்கர விபத்து..
Reviewed by Author
on
November 25, 2019
Rating:

No comments:
Post a Comment