சுவிஸில் பிறந்தும் வெளியேற்றப்படும் கட்டாயத்தில் இலங்கை பெற்றோரின் பிள்ளைகள் -
சுவிஸில் புகலிடம் கோரும் இலங்கை பெற்றோருக்கு பிறந்த இரண்டு பிள்ளைகள் ஐக்கிய நாடுகள் குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கையின் ஷரத்துக்களை மீறி இலங்கைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சுவிஸர்லாந்தில் பிறந்த 9 வயதான தமிழ் சிறுவனும், அவரது 5 வயது சகோதரியும் எதிர்வரும் டிசம்பர் 19ஆம் திகதி பெற்றோருடன் இலங்கைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக புகலிடம் கோரும் பிள்ளைகள் தொடர்பான மனுவொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கைக்கு அமைய சுவிஸர்லாந்தில் பிறந்த புகலிட கோரிக்கையாளர்களின் பிள்ளைகள் தமது உரிமைகளை இழந்துள்ளதாக குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பிள்ளைகளுக்கு அவர்களின் தோற்றம் காரணமாக பாகுபாடு காட்டப்படுகிறது. பின்தங்கியுள்ள இந்த பிள்ளைகள் பல ஆண்டுகளாக பெரும்பாலும் தமது பெற்றோர் மற்றும் ஏனைய பலருடன் நலன்புரி நிலையங்களில் வாழ நேரிட்டுள்ளது.
இந்த பிள்ளைகள் சுவிஸ் பிள்ளைகளை விட மாறுப்பட்ட வாழ்க்கை வாழ்கின்றனர். நான்கு, ஐந்து இருப்பிடங்களை அதாவது ஒன்று அல்லது இரண்டு சிறிய அறைகளில் வாழ்கின்றனர்.
பல நாடுகள் பல்வேறு கலாசாரங்களை கொண்ட பிள்ளைகளுடன் வாழ்கின்றனர். தங்கியுள்ள இடத்தில் விளையாட பிள்ளைகள் இருந்தாலும் சுவிஸ் பிள்ளைகளை விளையாடவோ அல்லது பிறந்த நாள் விழாக்களுக்கு அழைக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.
சுவிஸ் குடும்பங்கள் தமது பிள்ளைகளை இப்படியான நலன்புரி நிலையங்களுக்கு அனுப்ப விரும்புவதில்லை என்பதே இதற்கு காரணம். புகலிடம் கோருவோரின பிள்ளை தமது தோற்றம் காரணமாக சுவிஸ் பிள்ளைகளை விட மிகவும் வித்தியாசமான குழந்தை பருவத்தை அனுபவிக்கின்றனர்.
புகலிடம் கோரும் பெற்றோரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு அவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டால், இந்த பிள்ளைகள் சுவிட்சர்லாந்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்திருந்தாலும், சுவிட்சர்லாந்தில் பிறந்திருந்தாலும் கூட, அவர்கள் சுவிஸில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
இந்த பிள்ளைகள் தமது பெற்றோரின் நாட்டில் வாழ்ந்தில்லை, தம்மை சுவிஸ் பிள்ளைகளை போல அவர்கள் உணர்கின்றனர்.
இந்த விடயத்தில் பிள்ளைகள் வித்தியாசத்தை உணரவில்லை. தமது நண்பர்கள் தங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாம் ஏன் வெளிநாடு செல்ல வேண்டும் என்பது இந்த பிள்ளைகளுக்கு புரியவில்லை.
பெற்றோரின் தாயகத்திற்கு திரும்பும் பிள்ளைகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். பெற்றோரின் தாயகம் இந்த பிள்ளைகளுக்கு ஒத்து போகும். எனினும் அவர்கள் திருப்பி அனுப்பபட்டமை தொடர்பான அதிர்ச்சி அவர்களின் வாழ்நாள் வரை தொடரும்.
பல சந்தர்ப்பங்களில் சுவிஸர்லாந்தில் போன்ற பெற்றோரின் தாய் நாட்டில் ஒரு பிள்ளைக்கு வளர முடியாது. இது ஐக்கிய நாடுகள் குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கையின் 6 ஷரத்தை மீறுகிறது. பிள்ளைகள் மொழியை பேசுவது சிரமம், கல்வியின் பின்தங்கி விடுகின்றனர். சுவிஸில் இருந்து வெளியேறுதல் மற்றுமம் புதிய நாட்டில் முற்றிலும் வேறுவிதமான வாழ்வியலில் மூழ்கடிக்கப்படுகின்றனர்.
விளையாட்டில் திறமையான பிள்ளைகள் சுவிஸர்லாந்தில் சிறப்பாக கற்ற பிள்ளைகள் புதிய நாட்டில் ஆரம்பித்தில் இருந்து தொடங்க வேண்டும். இதனை எமது சுவிஸர்லாந்து பிள்ளைகள் எம்மிடம் எதிர்பார்த்த விடயமல்ல. இது வேறுப்படுத்தி பார்க்கும் அடையாளம்.
இதனை தவிர பிள்ளைகள் நாட்டை விட்டு செல்லும் போது மனதளவிலும் பாதிக்கப்படுகிறார். அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றத்திற்கு தயாரான நிலையில் இல்லை.
முக்கியமான விடயம் என்னவெனில் இந்த பிள்ளைகள் எந்த சந்தர்ப்பதிலும் பெற்றோரின் தாய் நாட்டுக்கு செல்ல விரும்பாவிட்டாலும் அது குறித்து பேசுவதில்லை என்பதே இங்கு முக்கியமானது. நீங்கள் உங்கள விசாவுக்கு விண்ணப்பிக்காமல் இருந்திருக்கலாம். எவரும் உங்களுக்கு அனுதாபம் காட்ட மாட்டார்கள். இது ஐக்கிய நாடுகள் குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கையின் 12வது ஷரத்தை மீறும் செயல்.
பெற்றோர் விவாகரத்து பெற்றிருந்தால், பிள்ளைகள் சில வயது வரை தாம் விரும்பியவருடன் வாழ முடியும். யாருடன் வாழ விரும்புகிறார்கள் என்பது அவர்கள் கூற முடியும்.
எனினும் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்படும் போது பிள்ளைகள் தமது வாழ்க்கை உட்பட எதிர்காலத்தின் அனைத்து அங்கங்கள் பற்றி கவனத்தில் கொண்டாலும் அது பற்றி தெரிவிக்க முடியாது.
9 வயதான சிறுவனும் அவரது 5 வயதான சகோதரியும் எதிர்வரும் டிசம்பர் 19 ஆம் திகதி தமது பெற்றோருடன் இலங்கை செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளதால், இந்த மனுவை வெளியிட்டுள்ளோம்.
இந்த பிள்ளைகள் சுவிஸர்லாந்தில் பிறந்தவர்கள். இந்த நாட்டுடன் நன்கு ஒருங்கிணைந்தவர்கள். 5 ஆண்டுகளுக்கு மேலாக நலன்புரி நிலையத்தில் வசித்து வருகின்றனர். அறியாத இலங்கைக்கு செல்ல பிள்ளைகள் மிகவும் அஞ்சுகின்றனர்.
இவர்களின் 18 வயதான அண்ணன் சுவிஸர்லாந்தில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இலங்கைக்கு திரும்பிச் சென்றால், நீண்டகாலம் தமது மூத்த அண்ணனை பிரிய வேண்டியிருக்கும். இந்த பிள்ளைகள் இலங்கைக்கு செல்ல விரும்பவில்லை. 9 ஆண்டுகளுக்கு பின்னர் சுவிஸர்லாந்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பது அவர்களுக்கு புரியவில்லை.
இவர்களின் நண்பர்கள்,சகோதரர்கள் இங்கு தங்க அனுமதிக்கப்படுகிறார்கள். தமக்கு ஏன் இந்த பராபட்சம் என்பது அவர்களுக்கு புரியவில்லை. இந்த பிள்ளைகள் தம்மை சுவிஸர்லாந்து பிள்ளைகளை போலவே உணர்கின்றனர்.
இந்த மனுவின் மூலம் தமது பிள்ளைகளின் நல்வாழ்வு குறித்து புகலிடம் கோரும் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸில் பிறந்தும் வெளியேற்றப்படும் கட்டாயத்தில் இலங்கை பெற்றோரின் பிள்ளைகள் -
Reviewed by Author
on
November 25, 2019
Rating:

No comments:
Post a Comment