மன்னாரில் 4 டெங்கு நோயாளர்கள் இது வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்-சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி எஸ்.எம்.கில்றோய்-படம்
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இது வரை நான்கு (4) டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி எஸ்.எம்.கில்றோய் தெரிவித்தார்.
இவ் விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,
தற்போது ஏற்பட்டுள்ள மழை காரணமாக மன்னாரில் டெங்கு நுளம்பின் பரவல் அதிகரித்துள்ளது.
தற்போது தேசிய டெங்கு ஒழிப்பு வார வேளைத்திட்டம் மன்னார் சுகாதர வைத்திய அதிகாரி பிரிவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த பணியில் பொலிஸார் , சுகாதார ஊழியர்கள் இணைந்து பொது மக்களின் உதவியுடன் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இது வரை 4 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் வெளி மாவட்டங்களான புத்தளம், கொழும்பு மற்றும் யாழ் மாவட்டங்களில் இருந்து மன்னார் வந்தவர்களிலே குறித்த தாக்கம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நோயை பரப்புகின்ற டெங்கு நுளம்பின் குடம்பிகள் மன்னாரில் தொடர்ச்சியாக பல இடங்களில் இனம் காணப்பட்டு வருகின்றது.
குறிப்பாக மக்கள் பாவனைக்கு உற்படுத்தி கைவிட்ட பொருட்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் அகற்றாமையினால் குறித்த பொருட்களில் டெங்கு நுளம்பு உற்பத்தியாகுவது அடையாளம் காணப்பட்டுள்ளது.
மன்னாரில் உரிய வடிகான் அமைப்பு இல்லாத நிலையில் அண்மையில் பெய்த மழை காரணமாக மழை நீர் தேங்கி காணப்படுகின்றது.
இதனால் ஏனைய நுளம்புகளின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.தொடர்ச்சியாக மன்னாரில் டெங்கு நுளம்பின் உற்பத்தியை கட்டுப்படுத்த மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்து.
எனினும் மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கும் பட்சத்தில் டெங்கு நுளம்பு உற்பத்தியை உரிய முறையில் கட்டுப்படுத்த முடியும் என மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி எஸ்.எம்.கில்றோய் மேலும் தெரிவித்தார்.

Reviewed by Author
on
November 01, 2019
Rating:

No comments:
Post a Comment