700 கைதிகளை காப்பாற்றிய தொழிலதிபர்: செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா? -
ஐக்கிய அமீரகத்தில் பிரபலமான நிறுவனம் ஒன்றின் தலைவரான ஃபிரோஸ் மர்ச்சண்ட் என்பவரே சுமார் 20 கோடி ரூபாய் செலவிட்டு குறிப்பிட்ட கைதிகளை மீட்டவர்.
சகிப்புதன்மைக்கான ஆண்டு மற்றும் ஐக்கிய அமீரகத்தின் 48-வது தேசிய தினம் உள்ளிட்ட காரணங்களால் தொழிலதிபர் ஃபிரோஸ் சிறையில் வாடும் 700 பேரின் அபராத தொகையை செலுத்த முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தண்டனை காலம் முடிந்தும் அபராத தொகை செலுத்த முடியாமல் சிறையில் மீள முடியாமல் இருப்பவர்களுக்கு,
குடும்பத்தாருடன் இணைந்து புது வாழ்க்கை தொடங்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவதே இதன் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானின்ஸ்தான், ஈராக், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, தாயாலாந்து உள்ளிட்ட 30 நாடுகளில் உள்ள கைதிகளுக்கு இதன் பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஐக்கிய அமீரகத்தின் 7 மாகாணங்களில் உள்ள சிறைகளில் வாடும் உரிய நபர்களை தெரிவு செய்து சிறை நிர்வாகம் பட்டியல் தயார் செய்யும்.
தொடர்ந்து சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கைதிகளை விடுவிக்கும் ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்படும் என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
700 கைதிகளை காப்பாற்றிய தொழிலதிபர்: செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா? -
Reviewed by Author
on
November 26, 2019
Rating:
No comments:
Post a Comment