2019 ஆம் ஆண்டில் இந்தியாவை உலுக்கிய 10 கொலை சம்பவங்கள்! உன்னாவ் முதல் பிரியங்கா ரெட்டி வரை -
உன்னாவ் பாலியல் வன்கொடுமை
உத்தரபிரதேஷம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு எதிராக புகார் தெரிவித்ததால், டிசம்பர் 5ஆம் திகதி 5பேர் கொண்ட குழுவால் எரிக்கப்பட்டார். 90 சதவிகிதம் தீகாயத்துடன் மருத்துவமனையில் தீவிரசிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது இந்திய நீதிதுறையின் மீதான நம்பிக்கையை மக்களிடையே கேள்வி எழுப்ப செய்தது.
மந்திரவாதி தம்பதியினர் நிகழ்த்திய கொலை
ஜார்கண்ட் மாநிலத்தில், ஹார்வா மாவட்டத்தில் ஆகஸ்ட் 20ஆம் திகதி பெண் ஒருவர் கண்கள் நோட்டப்பட்டு சிறு ஆயுதங்கள் குத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த தம்பதியினர், அந்த பெண்ணிற்கு பேய் பிடித்ததால் இது போன்ற நடத்ததாக தெரிவித்தனர்.
குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த தம்பதியினர்.
உத்தரபிரதேஷம் மாநிலம் காசியாபாத் அருகே குல்சன் வாசுதேவ் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு மனைவியுடன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குல்சன் எழுதிய தற்கொலை குறிப்பில், தனது மைத்துனரால் 2கோடி ரூபாய் ஏமாற்றப்பட்டு விட்டதாக குறிபிட்டிருந்தார்.
தோசையின் அரசன் மரணம்
சரவணபவன் ராஜகோபால் தோசையின் அரசன் என்று அழைப்பப்பட்டவர். இவர் ஜீவஜோதியின் கணவரை கொலை செய்ததான் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரது ஆயுள் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தபின்னரும் சிறை செல்வதை தவிர்த்து வந்தர் அவர். இந்நிலையில், ஜூலை 18ஆம் திகதி மரணம் அடைந்தார். இது நாடு முழுவதும் பெரும் பேச்சாக இருந்தது.
டிக்டோக் பிரபலம் கொலை
டிக்டோக் பிரபலம் Mohit Mor டெல்லியில் உள்ள Najafgarh என்ற சந்தை பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார். பொது இடத்தில் அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலையில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்ட நிலையில், அவன் 30 லட்சம் பணத்திற்காக இந்த கொலையை செய்ததாக தெரியவந்தது.
14 ஆண்டுகளில் 6 பேரை விஷம் கொடுத்து கொன்ற கேரள பெண்
நாட்டையே உலுக்கிய பெரிய நிகழ்வு ஜோலி நிகழ்த்திய கொலைகள். 2002ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டுவரை ஜோலி 6 கொலைகள் செய்துள்ளார். குடும்ப சொத்திற்காகவும், உறவினர் ஒருவரை திருமணம் செய்ய திட்டமிட்டும் இந்த கொலைகளை அவர் முன்னெடுத்துள்ளார். அவரை கைது செய்து சிறையில் அடைத்த பொலிசார், மேலும் கொலைகள் செய்ய ஜோலி திட்டமிட்டிருந்ததை அறிந்து அதிர்ந்துபோயினர். இந்த வழக்கு கேரள நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.
பாஜக எம்.எல்.ஏ, பெண்ணை பாலியல் வன்கொடுமைக்குள்ளாகிய வழக்கு
உத்தரபிரதேஷம் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரை பாஜக முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகினார். புகார் தெரிவித்த பெண்னை விபத்தை ஏற்படுத்தி கொலை செய்ய முயற்சியில் அந்த பெண்ணின் தந்தை பலியானார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இரு வழக்குகளையும் தனித்தனியாக விசாரித்த நீதிமன்றம் பாலியல் வன்கொடுமை வழக்கில், ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம்
பொள்ளாச்சியில் அரசியல் பிரமூகர்களின் பின்புலத்தில் இளைஞர்கள் இளம்பெண்களை குறிவைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வீடியோவாக பதிவு செய்து பணம் சம்பாதித்தனர். இந்த வழக்கு நாட்டில் பெரும் சலனத்தை உருவாக்கியது. பெருமளவில் பேசப்பட்ட இச்சம்பவம், பின் நீதிமன்ற உத்தரவில் 4பேர் சிறையில் அடைப்பட்டுள்ளனர்.
ஆனால், தமிழக அரசு இது குறித்து பெரும் நடவடிக்கை எடுக்காததால் அந்த குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
பிரியங்கா ரெட்டி கொலை
நவம்பர் மாதம் 27ஆம் திகதி பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி 4பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. பலரும் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் குற்றவாளிகள் தப்பிக்க முயன்றதாக என்கவுண்டர் செய்யப்பட்டனர்.
இதனால், பொலிசாருக்கு வாழ்த்துகள் குவிந்தது. இன்றுவரை அந்த குற்றவாளிகளின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2019 ஆம் ஆண்டில் இந்தியாவை உலுக்கிய 10 கொலை சம்பவங்கள்! உன்னாவ் முதல் பிரியங்கா ரெட்டி வரை -
Reviewed by Author
on
December 30, 2019
Rating:

No comments:
Post a Comment