அவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை -
அவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
புலம்பெயர் நாட்டில் தமிழ் மொழியில் இவ்வாறானதொரு சாதனையை நிகழ்த்தியமை தொடர்பில் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அவுஸ்திரேலியாவில், 21 வருடகால தமிழ் மொழிப் பரீட்சை வரலாற்றில் இந்த சாதனை முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை -
Reviewed by Author
on
December 14, 2019
Rating:

No comments:
Post a Comment