அன்னை கல்வி நிலையத்தினால்-மரம் நடுகை விழா-படங்கள்
நானாட்டானில் இயங்கி வருகின்ற அன்னை கல்வி நிலையத்தினால் 17.12.2019 (செவ்வாய்கிழமை) “சிறு தளிர் பெரு விருட்சம்” என்ற சிந்தனையுடன் நானாட்டான் பிரதேசசபையினுடைய பொதுவிளையாட்டு மைதானத்தில் மரநடுகை நிகழ்வானது முன்னெடுக்கப்பட்டது. இந் நிகழ்வின் ஆரம்ப வைபவம் காலை 9.00 மணியளவில் நிலையத்தின் ஒன்றுகூடல் அரங்கில் நடைபெற்றது.
இதில் நானாட்டான் பிரதேச சபையினுடைய தவிசாளர் கௌரவ.திருச்செல்வம் பரஞ்சோதி அவர்களும். மத்தியசுற்றாடல் அதிகாரசபையினுடைய மன்னார் மாவட்ட பொறுப்பாளர் கலாநிதி திருமதி.இராஜேஸ்வரன் ஹிமலதா அவர்களும்,நானாட்டான் பிரதேச சபையினுடைய உபதவிசாளர் திரு.பி.லூர்த்துநாயகம், பிரதேசசபை உறுப்பினர் திரு.ஆர்.ஜீவாஜெகதீசன்,பிரதேசசபை உறுப்பினர் திரு.ஆர்.நிமல்ராஜ்,மோட்டைக்கடை கிராமசேவகர் திரு.து.சு.றொன்சன் நொனாய்.பிரதேசசபையின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் திரு.ஆர்.டென்சில் பறுனாந்து, வன பரிபாலன திணைக்களத்தின் உத்தியோகத்தர் திரு.டினேஸ், கமநல திணைக்களத்தின் போதனாசிரியர் நானாட்டான் வர்த்தகசங்க தலைவர்,செயலாளர்,நானாட்டான் ஆட்டோசங்க தலைவர்,செயலாளர்,பொருளாளர்,டைமன் ஸ்டார் விளையாட்டுக்கழக தலைவர், றீகன் ஸ்டார் விளையாட்டுக்கழக தலைவர் மற்றும் நியைல ஆசிரியர்கள்,மாணவர்கள் என கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.
நானாட்டான் பொதுவிளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகளை நடுவதற்கு பிரதேசசபை தலைவர் அவர்கள் அனுமதி வழங்கியிருந்தார் அவருக்கு நிலையம்சார்பான நன்றி. அத்தோடு இது போன்ற மரநடுகையினை கல்வி நிலையங்கள் முன்னெடுப்பது வரவேற்கப்படவேண்டிய விடயம் எனவும்ää மாணர்கள் தங்கள் பிறந்த தினத்தில் ஒரு மரக்கன்று நடுவது சிறப்பானது என்றும் தனது உரையிலே குறிப்பிட்டார். அத்துடன் மைதானத்திலுள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவதை பிரதேசசபை பொறுப்பெடுப்பதாகவும் குறிப்பிட்டார். அதனை தொடர்ந்து
மத்தியசுற்றாடல் அதிகார சபையினுடைய மாவட்டபொறுப்பாளர் தனது உரையின் போது மன்னார் மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையத்தினால் மரநடுகையினை முன்னெடுப்பது இதுவே முதல் தடவை எனவும் இப்பிரதேசத்தினை சேர்ந்த ஏனைய அமைப்புக்களும் இதுபோன்ற செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மாணவர்களுக்கு மரம் நடுகையின் முக்கியத்துவத்தினையும் எடுத்துரைத்து வைக்கபடும் மரக்கன்றுகள் தொடர்ந்தும் பாதுகாத்து வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்றும் தனதுரையில் குறிப்பிட்டார்.
இந்நிகழ்விலே நானாட்டான் ஆரோக்கியமாதா ஆலயம், ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலயம், அடைக்கலமாதா ஆலயம், சிவராஜா இந்து வித்தியாலய மைதானத்திற்கு என பிரமுகர்களினால் அன்னை கல்வி நிலையத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களின் நிகழ்வுகளாக …. செல்வி நாகநாதன் கனி~h அவர்களினால் மரம் பற்றிய சிறிய பேச்சு செல்வி சுதாகரன் டினுpகா அவர்களினால் மரத்தினுடை பயன் தொடர்பான கவிதையும் இடம்பெற்றது.
அரங்க நிகழ்வுகளை தொடர்ந்து நானாட்டான் பிரதேசசபையினுடைய பொது விளையாட்டு மைதானத்தில் மரநடுகை இடம்பெற்றது. இதில் மேற் குறிப்பிட்டவர்களுடன் இணைந்து மாணவர்களும் மரக்கன்றுகளை ஆர்வத்துடன் நடுகை செய்தனர்.
நடுகைசெய்யப்பட்ட மரக்கன்றுகளை சுற்றி அடைப்பதற்கான தட்டிகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. தொடர்பராமரிப்புக்கு மாணவர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கு வன பரிபாலன திணைக்களம் (மன்னார் மாவட்டம் உயிலங்கும்) ஒரு தொகுதி மரக்கன்றுகளை அன்பளிப்பு செய்திருந்தனர்.
நானாட்டான் பிரதேச சபையினர் - ஒரு தொகுதி (200)பனைமட்டைகளை வழங்கியியதுடன் வெளிக்கள உத்தயோத்தினரை பயன்படுத்தி குழிகள் அமைத்துத் தந்தனர்.
நானாட்டான் பகுதியினை சேர்ந்த நலன்விரும்பி திரு.சி.விமலசேகரம் அவர்கள் 20 மரக்கன்றுகளை அடைப்பதற்கான பனைமட்டை தட்டிகளை அமைப்பதற்கு நிதி உதவி செய்திருந்தார் இவர்களுக்கும் எமது நிலைய ஆசிரியர்கள்ää மாணவர்கள் அனைவருக்கும் அன்னை கல்வி நியையத்தினரால் நன்றிகளை தெரிவித்து நிற்கின்றோம்.

Reviewed by Author
on
December 23, 2019
Rating:

No comments:
Post a Comment