இலங்கை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்த இளவரசர் -
கடந்த ஏப்ரல் 23ம் திகதி அன்று இலங்கையின் பல்வேறு இடங்களில் நடத்தப்ட்ட பயங்கரவாத தாக்குதலில் 250க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்ததோடு, ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவமானது உலகநாடுகள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், 1982 ஆம் ஆண்டில் மனோர் பூங்காவில் நிறுவப்பட்ட இம்மானுவேல் கிறிஸ்டியன் ஃபெலோஷிப் என்ற தமிழ் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு டிசம்பர் 18ம் திகதியன்று பிரித்தானிய இளவரசர் சார்லஸ் பயணம் செய்தார்.

அங்கு இலங்கை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உறவினர்களை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த ஈஸ்டர் நாளில் இலங்கையில் தேவாலயங்கள் மீது முற்றிலும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் வாழ்க்கையை இழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் இந்த சமூகத்துடன் நிற்க நான் இங்கு வந்துள்ளேன்".

"நீங்களும் உங்கள் சக கிறிஸ்தவர்களும் தாங்கிக் கொண்ட காயங்களை, குணப்படுத்தக்கூடிய வார்த்தைகள் எதுவும் இல்லை. ஆனால் நானும், இந்த நாட்டில் உள்ள பலரும், நீங்கள் அனுபவித்ததைப் பற்றியும், உங்கள் அனைவரையும் நாங்கள் எவ்வளவு நினைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன் எனக்கூறினார்.

மேலும், செயிண்ட் அந்தோனி, செயிண்ட் செபாஸ்டியன் மற்றும் மற்றும் சியோன் சர்ச் ஆகிய தேவாலயங்களில் நடத்தபட்ட தாக்குதல்கள், எல்லா இடங்களிலும் மத சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகும் எனப்பேசினார்.

இலங்கை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்த இளவரசர் -
Reviewed by Author
on
December 23, 2019
Rating:
No comments:
Post a Comment