மன்னாரில் நேர்மையான பொதுத் தேர்தல் 2020 எனும் கருப்பொருளில் விழிர்ப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.படங்கள்
'நேர்மையான பொதுத் தேர்தல் 2020' எனும் கருப்பொருளில் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் (PAFFREL) பப்வ்ரல் அமைப்பின் வழி நடத்தலுடன் மன்னாரில் இன்று சனிக்கிழமை (25) காலை விழிர்ப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் இடம் பெற்றது.
-மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் பிரதான மண்டபத்தில் இடம் பெற்ற குறித்த விழிர்ப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தில் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார், மன்னார் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் , பப்வ்ரல் (PAFFREL) அமைப்பின் சுதந்திரமான நியாயமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் ச.சிரீதரன்,சமூக செயற்பாட்டாளர் மெடோசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-குறித்த நிகழ்ச்சித்திட்டத்தில் ஊடகவியலாளர்கள்,சட்டத்தரணி,ஓய்வு பெற்ற அரச அதிகாரிகள்,அரச,அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள்,சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது நாட்டில் இடம் பெற்ற தேர்தல்கள் தொடர்பாக ஆராயப்பட்டதோடு, 2020 ஆம் ஆண்டு இடம் பெறவுள்ள பொதுத் தேர்தல் நேர்மையான பொதுத் தேர்தலாக அமைய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
-குறிப்பாக தேர்தலில் போட்டியிடவுள்ள ஒரு வேட்பாளர் கொண்டிருக்க வேண்டிய தகுதிகள் தொடர்பாகவும், மக்கள் தெரிவு செய்ய வேண்டிய மக்கள் பிரதி நிதி இருக்க வேண்டிய தகுதி தொடர்பாகவும் ஆராயப்பட்டது.இதன் போது குழு செயற்பாடுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
January 26, 2020
Rating:

No comments:
Post a Comment