அரசியல் கைதிகளான எங்களை விடுவிக்க மதத்தலைவர்களும் ஈடுபட வேண்டும். அரசியல் கைதிகள் விண்ணப்பம்
நீண்ட காலமாக எவ்வித நடவடிக்கையும் இன்றி சிறைச்சாலையில் அரசியல் கைதிகளாக இருக்கும் எங்களை விடுவிப்பதிலோ அல்லது சட்ட ரீதியாக விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அரசியல்வாதிகளுக்கு அப்பால் மதத் தலைவர்களும் ஈடுபடும் பட்சத்தில் தங்களுக்கு விமோசனம் கிடைக்கும் என அனுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளாக இருப்போர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலமாக எவ்வித விசாரணையும் இன்றிஅரசியல் கைதிகளாக அனுராதப்புரம் சிறைச்சாலையில் இருந்து வரும் பதினொரு அரசியல் கைதிகளை மன்னார் பிரஜைகள் குழு பிரதிநிதிகள் மன்னார் பிரஜைகள் குழு தலைவர் அருட்பணி ஞானபிரகாசம் அடிகளார் தலைமையில் சட்டத்தரனி ஏ.டபிள்யூ. அர்ஜுன் சகிதம் (22.01.2020) புதன்கிழமை அனுராதப்புரம் சிறைச்சாலைக்குச் சென்று இவ் அரசியல் கைதிகளை பார்வையிட்டனர்.
அந்நேரம் இவ் அரசியல் கைதிகள் மன்னார் பிரஜைகள் குழு பிரதிநிதிகளிடம் கருத்து தெரிவிக்கையில் அரசியல் பிரதிநிதிகள் அரசு சார்பற்ற பிரதிநிதிகள் யாவரும் எங்கள் விடுதலை கோரி ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்ற போதும் இதுவரைக்கும் சாதகமான செயல்பாடுகள் நடைபெறாது இருந்து வருகிறது.
எங்கள் விடுதலை கோரி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மதத் தலைவர்களும் முன்னெடுப்பார்களானால் பலன் கொடுக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம். பல வருடங்களாக நாங்கள் எவ்வித விசாரனைகளும் இன்றி சிறைசாலையில் வாடும்போது நாங்கள் மட்டும் இங்கு வேதனைகளை அனுபவிக்கவில்லை மாறாக எங்கள் குடும்பங்களும் பெரும் வேதனைகளுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
ஜனாதிபதி பலருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதுபோல் எங்களுக்கும் இவ்வாறு செய்ய மதத்தலைவர்கள் தங்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆகவேதான் மதத் தலைவர்களும் எங்கள் மட்டில் கருசனை கொள்ள வேண்டும் என இவர்கள் வேண்டிக்கொண்டனர்
மன்னார் பிரஜைகள் குழு இவர்களுக்கு உணவுகளும் நாளாந்தம் பாவிக்கும் அத்தியாவசிய பொருட்களும் வழங்கினர்.

Reviewed by Author
on
January 26, 2020
Rating:

No comments:
Post a Comment